என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bhopal"
- மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து.
- பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை.
மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கிரேன் சரிந்து 20 அடி உயரத்தில் இருந்து கீயே விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த கிரேனில், போபாலின் வார்டு 66-ன் கவுன்சிலர் ஜிதேந்திர சிங் ராஜ்புத் தனது மாமாவுடன் கிரேனில் இருந்தார். அவர்களில் ஒருவர் கிரேன் ஆபரேட்டரிடம் மேலே செல்லும்படி சைகை செய்வதைக் கண்டார்.
கிரேன் சிலையை அடைந்ததும், கவுன்சிலர் மாலை அணிவிக்க முன்னோக்கி சாய்ந்தபோது, கிரேனில் இருந்த வெல்டிங் உடைந்ததால், கிரேன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ராஜ்புத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, அதே நேரத்தில் அவரது மாமாவும் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- தலைமை செயலகமான வல்ல பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது?
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்ல பவன் (Vallabh Bhavan), உள்ளது. இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தீ விபத்து குறித்து பேசிய ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர பட்வாரி, "ஏற்கனவே தலைமை செயலகமான வல்லப் பவனில் 4 முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பது? ஆனால் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தியாவில் குறிப்பாக மத்தியப் பிரதேச தலைமை செயலகத்தில் மட்டும் ஏன் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் உமாங் சிங்கார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், முதலமைச்சர் மோகன் யாதவுக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் இடையே பிரச்சினை உள்ளது. அதனால் தான் சிவராஜ் சிங் சவுகான் தனது ஊழல் கோப்புகளை வல்ல பவனில் வைத்து எரித்து வருகிறார். பாஜக அரசின் உள்கட்சி பிரச்சினைகளால் லட்சக்கணக்கான மக்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மோசடி செய்து தீ வைப்பது பாஜக அரசின் பழைய வழக்கம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார் மோகன் யாதவ்
மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்லப் பவன் (Vallabh Bhavan), உள்ளது.
இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தீ விபத்து குறித்து ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.
#WATCH | On the incident of fire at Vallabh Bhavan State Secretariat in Bhopal, Madhya Pradesh CM Mohan Yadav says, "It has come to my knowledge that a fire broke out on the third floor of the old building of Vallabh Bhavan. On the basis of the information received from the… https://t.co/Is5f8TF7Mv pic.twitter.com/1pu23CA7ge
— ANI (@ANI) March 9, 2024
தற்போது வரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
- போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு வாய்ப்பு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
- மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், போபால் தொகுதி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பிரக்யா சிங் தாக்கூர், "நான் இதற்கு முன்பும் எம்பி சீட் கேட்கவில்லை, இப்போதும் நான் கேட்கவில்லை. முந்தைய காலத்தில் நான் கூறிய சில வார்த்தைகள் பிரதமர் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இது குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டும், அவர் என்னை மன்னிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தான் உண்மையான தேசபக்தர் என்று பிரக்யா தாகூர் பாராட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், பாராளுமன்றத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பி ரமேஷ் பிதூரிக்கும் மக்களவை வேட்பாளருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த காப்பகத்தில் குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்
- இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி காப்பகம் செயல்பட்டு வந்துள்ளது
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கன்னுங்கோ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பதிவேட்டில் 68 மாணவிகளின் பெயர்கள் இருந்த நிலையில், 42 மாணவிகள் மட்டுமே அங்கு இருந்தனர். மீதமுள்ள 26 மாணவிகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக எப் ஐ ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, சட்ட விரோதமாக காப்பகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த பிரியங்க் கன்னுங்கோ, "இந்தக் காப்பகத்தை மதபோதகர்கள் நடத்தி வந்துள்ளனர். தெருவில் திரிந்த குழந்தைகளை மீட்டு முறையான உரிமம் பெறாமல் இதனை நடத்தி வந்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்ற கட்டாய படுத்தப்பட்டுள்ளனர். காப்பகத்தில் 6 முதல் 18 வயது நிரம்பிய சிறுமிகள் இருந்தனர். இவர்களில் பலர் இந்துக்கள் என்றும் தெரிகிறது. மிகுந்த சிரமத்துக்கு இடையே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இரண்டு பெண் காவலர்களைத் தவிர்த்து இரவில் இரண்டு ஆண் காப்பாளர்களும் விடுதியில் இருந்துள்ளனர். இரவில் ஆண் காப்பாளர்கள் விடுதியில் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவ்ராஜ் சிங் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இச்சம்வத்தில் அரசு துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
- வரதட்சணை என்ற சமூக தீமையை முடிவுக்குக் கொண்டுவர உறுதி பூண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறி உள்ளார்.
- தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்று ஆசிரியை கூறுகிறார்.
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த செய்திகள் புதிதல்ல. ஆனால், அதை எதிர்த்து ஒரு சிலரே தைரியமாக பொதுவெளியில் வந்து போராடுகின்றனர்.
அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபாலில் உள்ள 27 வயதான ஆசிரியை ஒருவர், இந்த "சமூக தீமைக்கு" முற்றுப்புள்ளி வைக்க, போபால் காவல்துறை தலைமை அதிகாரி, ஹரிநாராயணன் சாரி மிஷ்ராவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
10க்கும் மேற்பட்ட ஆண்களால் வரதட்சணை காரணமாக தாம் நிராகரிக்கப்பட்டு தனக்கு திருமணம் நின்று போனதாக தெரிவிக்கும் அவர், தனது சொந்த அனுபவத்தை வைத்து இந்த மனுவை கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அவரின் தந்தை, கடந்த பிப்ரவரியில் பெண் பார்ப்பதற்காக ஒரு இளைஞனையும் அவனது குடும்பத்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். பின்னர் அந்த இளைஞனின் தந்தையிடம் வரதட்சணை குறித்து கேட்டிருக்கிறார். அவர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும், உங்கள் மகள் அழகாக இருந்திருந்தால், நாங்கள் உங்களுக்கு தள்ளுபடி தருவோம் என்று அந்த இளைஞனின் தந்தை கேலியாக பேசியுள்ளார்.
கடந்த வாரம், அவர் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாக மிஷ்ராவை சந்தித்தார். அவரிடம் அவர் அளித்த தனது மனுவில், திருமண இடங்களில் சோதனை நடத்துவதும், வரதட்சணை கொடுப்பவர்கள் அல்லது பெறுபவர்களைக் கைது செய்வதும்தான் இந்த கொடுமையை தடுக்க ஒரே தீர்வு என்றும், தண்டனை கிடைக்கும் என்ற பயம் மட்டுமே இந்த கொடூரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்றும் கூறுகிறார்.
"வரதட்சணை ஒரு சமூகத் தீமை, அதை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் (காவல்துறை) உறுதி பூண்டுள்ளோம். எந்தப் பெண் இது குறித்து உதவி கேட்டு காவல்துறையை அணுகினாலும் அவர்களுக்கு உரிய உதவியை வழங்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என மிஷ்ரா கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மிஷ்ரா, "காவல்துறைக்கு வரம்புகள் உள்ளன. அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. மேலும், இந்த விஷயத்தில் நாம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களின் மனநிலையையும் மாற்ற வேண்டும்" என கூறினார்.
பெண்கள் உரிமை ஆர்வலர் கவிதா ஸ்ரீவஸ்தவா இது குறித்து கூறுகையில், "காவல்துறையினால் கண்டிப்பாக உதவ முடியும். ஆனால் வரதட்சணையை சமாளிப்பது ஒரு சிக்கலான பிரச்சனை. இந்தியாவில் வரதட்சணை தடைச்சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" என கூறினார்.
இந்த ஆசிரியையை போன்று மேலும் பலர் துணிச்சலாக போராட துவங்கினால், இந்த சமூக அவலம் கட்டுக்குள் வரலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது.
- முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது மாடியில் இருந்து மேலே உள்ள 3 தளங்களிலும் தீ மளமளவென வேகமாக பரவியது. ஏ.சி. மெஷின்கள், சிலிண்டர்களில் தீ பரவியதால் பல வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
முதலில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. 14 மணி நேர கடும் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
- மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு.
மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது.
இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது.
இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது.
மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங்கை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்த நிலையில், திக்விஜய் சிங்கை எதிர்த்து தங்கள் கட்சியின் சார்பில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா வை களம் இறக்க பா.ஜ.க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வித்யா நகர் பகுதியில் நேற்று அப்பார்ட்மெண்டில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் துணியால் இறுக்கமாக கட்டி ஒரு மரப்பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அழுகி ‘மம்மி’ போன்று மாறிவிட்டது. இந்த வீடு பல மாதங்களாக பூட்டிக் கிடந்ததாக அருகில் வசிப்பவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
பூட்டப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் விமலா ஸ்ரீவஸ்தவா(60) போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தார். இவர் தனது மகன் அமித்(30) உடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து வீட்டை 8 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் விற்றார். ஆனால் வீடு தொடர்ந்து பூட்டிக்கிடந்ததால், கடந்த 6 மாதமாக அவரால் குடியேற முடியவில்லை. இது குறித்து தாய்-மகனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்வதற்காக உரிமையாளர் வந்தபோது, சடலம் கிடைத்துள்ளது.
சடலத்தினை ஆய்வு செய்தபோது அது ஆறு மாதங்களாக பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு, காயங்கள் மற்றும் அடையாளங்களை கொண்டு இறந்தது யார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். #BhopalMummifiedBody
மத்திய குடிநீர் வழங்கல்துறை மந்திரி உமாபாரதியின் பாதுகாவலர் குழுவில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராம் மோகன் தனேரிவா. மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த இவருக்கும், மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த அவர், மனைவியை அடித்து உதைத்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தம்பதியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் தனேரிவா மீது வழக்கு தொடர வேண்டும் என அவரது மனைவி உறுதியாக இருந்தார்.
எனவே கணவன்-மனைவி இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தனது பணித்துப்பாக்கியை எடுத்த தனேரிவா தனது தலையில் சுட்டுக்கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் போலீஸ் வாகனத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக மத்திய மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக மற்றொரு மந்திரியான நரேந்திர சிங் தோமரின் உதவியாளர் கடந்த 20-ந்தேதி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. #UmaBharti #PersonalSecurity #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்