என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bidi
நீங்கள் தேடியது "Bidi"
எட்டயபுரத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 12 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
எட்டயபுரம்:
கோவில்பட்டி பகுதி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா ஆலோசனையின் பேரில் எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் புகையிலை மற்றும் பீடி, சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எட்டயபுரம் நடுவிற்பட்டி பகுதியில் பட்டத்து விநாயகர் கோவில் அருகே கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பொது இடங்களில் பீடி, சிகரெட் புகை பிடித்த பொதுமக்கள் மற்றும் விற்பனை செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 12 பேருக்கு தலா ரூ. 100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை செய்யப்பட்டது.
சோதனையில் பள்ளி வளாகம் அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இனி வரும் காலங்களில் பள்ளி அருகில் விற்கக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, சுகாதார ஆய் வாளர்கள் சீனி வாசன், சுப்பிரமணி, மாரிக் கண்ணன், சீத்தாராம் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
×

X