search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Big Boss"

    • ஒரு நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுப்பப்படுகிறது.
    • ஒட்டுமொத்த உலகமே ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

    பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் இயல்பாக நடக்கிறதா அல்லது ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறதா என்ற கேள்வி, ஒவ்வொரு முறை புது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகும் போதும் போட்டியின் போதும் நிச்சயம் எழும். உலகின் பிரபல விளையாட்டு சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பார்க்கப்படும் WWE-வுக்கு அடுத்தப்படியாக ஒரு நிகழ்ச்சிக்கு இப்படிப்பட்ட சந்தேகம் எழுப்பப்படுகிறது.

    இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக் பாஸ் குறித்த சந்தேகத்திற்கு தி கிரேட் காளி பதில் அளித்துள்ளார். பிக் பாஸ் மட்டுமின்றி WWE தொடர்பான கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உங்களுக்கு தெரிவிக்கப்பட்டு விடும். ஒட்டுமொத்த உலகமே ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது.

    தற்போது திருமணங்களும் ஸ்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இதேபோன்று WWE போட்டி கூட ஸ்க்ரிப்ட் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.

    இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்ட கிரேட் காளி வாரத்திற்கு ரூ. 50 லட்சம் வரை சம்பளமாக பெற்றுக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகின.

    • 2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு.
    • பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    2013 ஆம் ஆண்டு விஜய் டி.வியில் ஒளிப்பரப்பான ஆஃபிஸ் தொடரில் அறிமுகமானார் விஷ்ணு. Zee தமிழின் சத்யா தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2017 ஆம் ஆண்டு 'இவன் யார் என்று தெரிகிறதா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதநாயகனாக அறிமுகமானார். பின்னர், பிக் பாஸ் சீசன் 7- நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு 4-வது ரன்னரப்பாக வந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்தரன் இயக்கத்தில் வெளிவந்த சி லா சோவ் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    சி லா சோவ் திரைப்படம் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து காட்டட்டும் என்று தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கமலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சவால் விடுத்துள்ளார். #ADMK #TNMinister #RajendraBalaji
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் வரும் போது ஆட்சி அமைக்க கூட்டணி முயற்சி செய்வர். அதற்கான சந்திப்பு தான் சந்திரபாபு நாயுடு, மு.க. ஸ்டாலின் இடையேயானது. இது அதிசயம் கிடையாது.

    அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக அதற்கான வியூகங்களை முதல்வர் நடத்தி வருகிறார். விரைவில் மற்ற கட்சி தலைவர்களை சந்தித்து பேசி பலமான கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்.

    ஸ்டாலினுக்கு பிரதமர் ஆகும் தகுதி உண்டு என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    நாட்டில் உள்ள அத்தனை வாக்காளர்களும் பிரதமர் ஆகும் தகுதி உள்ளவர்கள். சந்திரபாபு நாயுடுதான் மோடியை பிரதமராக்க விடிய விடிய நடந்து ஓட்டு கேட்டார். பாஜகவின் அலையை வைத்து தான் முதல்வர் ஆனார்.

    மத்திய ஆட்சியில் பெரிய அளவில் குற்றங்கள், குறைகள் இல்லை. மக்கள் பணியில் அக்கறையோடு உள்ளனர். ஆன்மீக ரீதியான ஆட்சியைத்தான் நடத்தி வருகிறார்கள்.

    குறை சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர் கட்சிகள் சொல்லலாம். இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்று தங்க தமிழ்செல்வன் கூறி வருகிறார்.

    இந்த 2 வருடம் மட்டும் அ.தி.மு.க. ஆட்சி அல்ல. 200 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சி தொடரும்.


    கமல் தேர்தலில் நின்று ஒரு சீட்டு ஜெயித்து விட்டு பேசட்டும். பிக் பாஸ் போல் அரசியல் களத்திலும் மீசையை முறுக்கி விட்டு நடத்தி பார்க்கிறார். அது எடுபடாது.

    மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரிக்கோ, கர்நாட கத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், முன்னாள் கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் தங்கம், உள்பட கட்சி நிர் வாகிகள் உடனிருந்தனர். #ADMK #TNMinister #RajendraBalaji
    ×