search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar Workers"

    • 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.
    • திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்.

    திருப்பூர் :

    ேஹாலி பண்டிகை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்களின் தொடர் வருகையால், பின்னலாடை தொழிலில் தொழிலாளர் தட்டுப்பாடு சீராகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.கடந்த 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட ஒரு வாரம் முன்னரே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.

    இது ஒருபுறமிருக்க வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. வீடியோ பரப்பியவர்களை கைது செய்து போலீசார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தமிழகம் பாதுகாப்பான நகரம், திருப்பூர் உங்களை பிழைக்க வைக்கும் ஊர் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பண்டிகை நிறைவு பெற்று ஒரு வாரம் முதல் 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.

    திருப்பூர் ரெயில் நிலைய முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநில ெரயில்களில், பொதுப்பெட்டியில் பயணிப்பவரே அதிகம். கடந்து 10 நாட்களில், 12 ஆயிரம் பேர் வரை ெரயில் மூலம் திருப்பூர் வந்தனர். ேஹாலி முடிந்தாலும் கூட வடமாநிலத்தவர் சொந்த மாநிலம் பயணிப்பதும் தொடர்கிறது. தினமும் 4 ஆயிரம் பேர் செல்கின்றனர். அங்கு சென்று குடும்பத்தினர் உறவினர்களை பார்த்து விட்டு இவர்களும் ஒரு மாதத்துக்குள் திருப்பூர் திரும்புவர் என்றனர்.

    ெரயில்களில் வந்திறங்குபவர்களுக்கு உடனே வேலை தர நிறுவனங்கள் பல விசிட்டிங் கார்டுகளுடன் காத்திருக்கின்றன. தங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இந்தி தெரிந்த, வடமாநில தொழிலாளர்களை தேர்வு செய்து அவர்களை அழைத்து வந்து ெரயில் நிலையத்தில் நிறுத்தி விடுகின்றனர். ெரயிலை விட்டு இறங்குபவர்களை அழைத்து ஈர்க்கும் வகையில் பேசும் இவர்கள் வேலை, சம்பளம், தங்குமிடம் தருகிறோம் என அழைத்து சென்று விடுகின்றனர்.

    இதனிடையே பீகார் தொழிலாளர்கள் திருப்பூர் வருகையையொட்டி பாட்னா ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் கேரளா எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ் 3-ம் நாளில் பாட்னா செல்கிறது.இதில் இதுவரை 24 பெட்டிகள் இருந்தது.

    என்ஜினை அடுத்துள்ள இரண்டு பெட்டி, ெரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் என மொத்தம் நான்கு பெட்டிகள் பொது பெட்டிகளாக உள்ளது. பீகார் மாநிலத்தவர் தொடர் வருகையால் இந்த ெரயிலுக்கான பயணிகள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் வருகிற 27-ந் தேதி முதல் ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரெயில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் போதும் (30-ந் தேதி முதல்) ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×