என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bike Adventure"
- வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை.
- போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் இருவரும் சாகசம் செய்துள்ளனர். பிறகு, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- இளைஞர்களின் அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது.
திருச்சி:
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது.
ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.
தலைநகரில் மட்டும்தான் இதை செய்ய முடியுமா, நாங்களும் செய்வோம் என்று போட்டி போட்டுக்கொண்டு இரண்டாம் தலைநகர் என்ற அடைமொழியுடன் கூடிய திருச்சியிலும் இந்த கூத்து சமீப காலமாக அரங்கேறி வருகிறது. மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து தினம் ஒரு விபத்து என்று நகர்கிறது.
இதற்கிடையே இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது. திருச்சி சத்திரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட் டது. தற்போது புது பொலிவுடன் காட்சி தரும் இந்த பாலம் மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதியாக உள்ளது. மாலை நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குடும்பத்துடன் வந்து இயற்கையை ரசிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் அதிக வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் காவிரி பாலம் விளங்குகிறது. இந்நிலையில் சில இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் விலை உயர்ந்த அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இந்த காவிரி பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாகச பயணம் செய்கின்றனர்.
பளபளக்கும் சாலையில் டயர்களை தூக்கி ஆக்சிலேட்டரை முறுக்கிக் கொண்டு சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இதுபோன்ற சாகச பயணங்களை திருச்சி-சென்னை பைபாஸ் கூத்தூர் பாலம் அருகாமையில் உள்ள புதிய அரியலூர்-சிதம்பரம் சாலையிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி மாநகராட்சி பகுதி, சர்ச் ரோடு பகுதிகளிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
- நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்க சாவடி அருகே, நாமக்கல் பைக்கர்ஸ் கிளப் என்ற அமைப்பை நடத்தி வரும் சிலர் பைக் சாகச நிகழ்ச்சி நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி நேற்று காலை இந்த பைக் சாகச நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் பைக்குகளை வைத்து அந்தரத்தில் பறந்தும், ஒற்றை சக்கரத்தில் பைக்கை தூக்கி வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கைகளை விட்டபடியே பைக்கை ஒட்டியும் சாகசம் செய்தனர். இதற்கு பார்வையாளர்களாக செல்லுபவர்களுக்கு ரூ.500 நுழைவு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த சாகச நிகழ்ச்சிக்கு காவல்துறையினரின் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடத்துவதற்கு முதலில் காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட இடத்தில் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆனால் இதுபோன்ற எவ்வித நிபந்தனைகளையும் கடைப்பிடிக்காமல் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்