என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BIMSTEC"

    • இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
    • பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

    புதுடெல்லி:

    தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒருங்கிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றன.

    இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர், பூடான் ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. வங்கக்கடலைச் சார்ந்துள்ள இந்த நாடுகள் அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது 7 நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு, சுகாதாரம் உள்பட 14 விஷயங்களில் இணைந்து செயல்பட ஆய்வு செய்யப்படும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்து நாட்டில் ஏப்ரல் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தாய்லாந்து அரசு செய்து வருகிறது.

    இந்நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுதினம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

    இந்த மாநாட்டில் அவர் வங்கதேசம், இலங்கை நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். #BIMSTECSummit #Modi
    புதுடெல்லி:

    வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மாநாடு நேபாளத்தில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.



    வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை இலக்காகக் கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். நேபாளம் சென்றடைந்த மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 

    இந்த மாநாட்டின்போது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மோடி பேச உள்ளார். பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் நேபாள் பாரத் மைத்ரி தர்மசாலையை மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.

    பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை மேலும் ஒருங்கிணைத்து, அமைதியான மற்றும் செழிப்பான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்குவதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். #BIMSTECSummit #Modi

    ×