search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bire"

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
    • சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×