என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BLOCK ROAD"

    • அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்புச்சி கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    அவர்கள் தொழில், கல்வி, போன்றவற்றிற்காக பல்லடம் மற்றும் திருப்பூர் செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியே அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்றும், அறிவிப்பில்லாமல் திடீரென நிறுத்தப்படுவ தாகவும் கூறி, அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமார், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • திருமண மண்டபத்தில் தக்கவைத்தனர்.
    • சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைது செய்யப்பட்டனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள பழைய காவல் நிலையம் முன்பு மறவனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மகத்தன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு, காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டது.இதையடுத்து உரிய அனுமதியின்றியும், ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கிலும் காவல் நிலைய வளாகத்தில் பந்தல் அமைத்ததாக விழாக் குழுவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்ததை கண்டித்து கீழப்பழுவூர் கடைவீதியில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 96 ே பரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தக்கவைத்தனர்.

    • அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை.
    • இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ராயம்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சீரான குடிநீர் விநியோகிக்க ப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்த ப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செந்துறை காவல் துறையினர் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போ க்கு வரத்துபா திக்கப்பட்டது.

    • சாலை மறியலில் ஈடுபட்ட 13 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
    • திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    பெரம்பலூர்:

    ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பெரம்பலூரில் பழைய பஸ் நிலையத்தில் காந்தி சிலை அருகே இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமைலில் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் நகர தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் செல்வக்குமார், திருச்சி கோட்டத் தலைவர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், வி.களத்தூர் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து, ஆத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ×