என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "blooddonation"
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- முகாமில் 100 பேர் ரத்ததானம் அளித்தனர்.
மடத்துக்குளம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர சாமி வரவேற்று பேசினார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், நாகராஜ், செல்வி ,சேதுபால் ,நடராஜன், செல்லப்பன் ,விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரத்ததான முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் , ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் துவக்கி வைத்தார் . இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி தலைமை செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், ராமசாமி பாபு , ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவிய ஐயப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் லதா பிரியா ஈஸ்வர சாமி, மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி உட் பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 100 பேர் ரத்ததானம் அளித்தனர்.
- பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்
பெரம்பலூர்,
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நாட்டு நலபணித்திட்ட மாணவர்களின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது,தானத்தில் சிறந்தது இரத்த தானமெனவும், இப்போதுள்ள இளைஞர்கள் தங்களின் குருதியை தானம் செய்வதன் மூலம் அவர்களின் கொடையுள்ளம் பெருகும், மற்றும் உடலிலுள்ள இரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகும். எனவே அனைவரும் தகுந்த இடைவெளியில் குருதி தானம் செய்ய வலியுறுத்தினார்.முன்னதாக துவக்க முகாமில் கல்லூரி நிறுவங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி முதல்வர் மாரிமுத்து பேராசிரியர்கள், பேராசிரியைகள் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
- பொதுமக்களிடமிருந்து மொத்தம் 150 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் சத்யராஜிடம் வழங்கினர்.
- ரத்ததானம் வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் மே தினத்தையொட்டி வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.முகாமில் தொழிலதிபர்கள், மகாத்மா காந்தி நற்பணி மன்ற உறுப்பினர்கள், ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பினர், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 150 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் சத்யராஜிடம் வழங்கினர்.
முகாமில் வெள்ளகோவில் ஆயிர நகர வைசிய இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் முரளி, சிவக்குமார், சரவணன், ஆர்.என். சரவணபவன் மற்றும் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை உறுப்பினர் அஜித்குமார், தனுஷ்ராம் ஆகியோர் செய்து இருந்தனர்.
- தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
- கே.கே.செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஒன்றிய நகர திமுக சார்பில் கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஆத்மா கமிட்டி தலைவரும்மான முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக கரம்பக்குடி நகர திமுக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ. முருகேசன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை கரம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும்மான வழக்கறிஞர் கேகே செல்லபாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கினர். இரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு வாழ்த்து சொல்லி சான்றிதழ் வழங்கினர். மேலும் பழங்கள் உள்ளிட்ட சத்துப் பொருட்களும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரிடம் கறம்பக்குடி மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையைப் பெற்ற மாவட்ட செயலாளர் உரிய அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் ராசி பரூக் நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்