search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bloomsbury"

    • குடும்பத்துடன் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார்
    • இந்த மோதலில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார்

    ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம்.

    இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா உட்பட பல நாடுகளில் பதிப்பக கிளைகள் உண்டு.

    இதன் ஒரு பதிப்பக அலுவலகம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கிறது.

    அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வந்தவர் இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஏட்ரியன் வாகன் எனும் 45 வயது பெண்மணி.

    இவர் இத்தாலியின் அமல்ஃபி கடற்கரையில் தனது கணவர், 12 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவர் குடும்பத்தினருடன் ஒரு வாடகை வேகப்படகில் கடலில் பயணித்தார்.

    அப்போது சற்று தொலைவில் ஒரு பெரிய படகு சுமார் 80 சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

    திடீரென ஏட்ரியன் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து அந்த பெரிய படகின் மீது மோதியது.

    இதில் ஏட்ரியன் படகிலிருந்து கடலில் தூக்கி வீசப்பட்டார். அப்போது பெரிய படகின் புரொபெல்லர் மீது மோதி அவர் படுகாயமடைந்தார்.

    உடனடியாக கடலிலிருந்து அவர் மீட்கப்பட்டார். அவசரகால சிகிச்சை குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவர்கள் வந்து பரிசோதித்து பார்த்த போது ஏட்ரியன் உயிரிழந்திருந்தார்.

    இந்த மோதலில் ஏட்ரியனின் கணவர் மைக் வைட்டிற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் இந்த கோர விபத்தை நேரில் கண்டதால் அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இத்தாலியின் புலனாய்வு துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ஏட்ரியன் உயிரிழப்பிற்கு ப்ளூம்ஸ்பரி பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

    ×