search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW 530i M Sport"

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய 530ஐ எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #BMW



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் புதிதாக பெட்ரோலில் இயங்கும் ஸ்போர்ட் மாடல் செடான் காரை அறிமுகம் செய்துள்ளது. 5 சீரிஸ் பிரிவில் 530 ஐ ஸ்போர்ட் எம் என்ற பெயரில் இந்த கார் வெளியாகியுள்ளது. 

    ஸ்போர்ட் என்ற பெயருக்கேற்ப இதன் முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. 18 இன்ச் அலாய் வீல், செவ்வக வடிவிலான எக்ஸாஸ்ட், எல்.இ.டி. மின்விளக்கு, ஃபாக் விளக்கு, கண்ணாடி மேற்கூரை ஆகியன இதன் தோற்றப் பொலிவை மேலும் அழகாக்கியுள்ளது. 



    காரின் உட்புறத்தில் டகோடா லெதர் சீட்டுகள் இதன் சொகுசு தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், போதுமான வெளிச்சம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், பி.எம்.டபிள்யூ செயலி உட்பட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் கூடுதலாக டிஸ்பிளே சாவியும் வழங்கப்படுகிறது. அத்துடன் பார்க் அசிஸ்ட், சுற்றுப்புற அமைப்பைக் காட்டும் கேமரா, ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 530 ஐ ஸ்போர்ட் எம் மாடலில் 4 சிலிண்டர், டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 252 பி.ஹெச்.பி. வேகத்தை 5,200 ஆர்.பி.எம்.மில் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.59.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடஸ் பென்ஸ் இ-கிளாஸ், ஆடி ஏ6 மற்றும் ஜாகுவார் எக்ஸ்.எப். ஆகியன இதற்கு கடும் போட்டியாக அமையும் என தெரிகிறது.
    ×