search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW G 310 GS"

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய மாடல்களின் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BMWG310R #BMWG310GS



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 GS மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய G 310 R மோட்டார்சைக்கிள் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் விலை குறைந்த மோட்டார்சைக்கிளாகவும், பிரீமியம் சிங்கிள்-சிலிண்டர் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாகவும் இருக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS மோட்டார்சைக்கிள்கள் முன்னதாக ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்படது. அன்று முதல் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிளாக இவை இருக்கின்றன. G 310 R மற்றும் G 310 GS மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் ஜூன் மாதத்தில் துவங்கின.



    பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலில் தங்க நிறத்தாலான 41மில்லிமீட்டர் யு.எஸ்.டி. முன்பக்கம் ஃபோர்க், 17 இன்ச் 5-ஸ்போக் காஸ்ட்-அலுமினியம் வீல்கள் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் கொண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு பி.எம்.டபுள்யூ. S 1000 R மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் சஸ்பென்ஷன்களை பொருத்த வரை முன்பக்கம் மற்றும் பின்புறம் முறையே 140 மில்லிமீட்டர் மற்றும் 131 மில்லிமீட்டர் வழங்கப்பட்டுள்ளன. பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலில் முன்பக்கம் 110/70 R17 மற்றும் பின்புறம் 150/60 R17 டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 300மில்லிமீட்டர் மற்றும் 200மில்லிமீட்டர் டிஸ்க்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. G 310 R மாடல்: ஸ்டைல் ஹெச்.பி (பியல் வைட் + HP லெட்டரிங்), காஸ்மிக் பிளாக் மற்றும் ரேசிங் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.



    பி.எம்.டபுள்யூ. G 310 GS மாடலிலும் G 310 R மாடலில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைப்பு பி.எம்.டபுள்யூ. R 1200 GS மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

    பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலுடன் ஒப்பிடும் போது பி.எம்.டபுள்யூ. G 310 GS மாடலில் பேக்-ஃபென்டர், பேஷ் பிளேட் மற்றும் உயர்த்தப்பட்ட எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்பக்க டையர்களின் அளவு முறையே 110/80 மற்றும் 150/70 என இருக்கிறது. GS மாடலில் முன்பக்கம் பெரிய 19 இன்ச் சக்கரமும், முன்புறம் 17 இன்ச் சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது.



    இதன் சஸ்பென்ஷன்கள் இருபுறமும் 180மில்லிமீட்டர் ஆக இருக்கிறது. பி.எம்.டபுள்யூ. G 310 GS: ரேசிங் ரெட், பியல் வைட் மற்றும் காஸ்மிக் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS மாடல்களில் 313சிசி ரிவர்ஸ்-இன்க்ளைன் செய்யப்பட்ட சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற இன்ஜின் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் @9500 ஆர்.பி.எம் மற்றும் 28என்.எம். @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. G 310 R மற்றும் G 310 GS மாடல்களின் விலை முறையே ரூ.2.99 லட்சம் மற்றும் ரூ.3.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #BMWG310R #BMWG310GS
    ×