search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BMW R20 Concept"

    • அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது முற்றிலும் புதிய கான்செப்ட் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. பி.எம்.டபிள்யூ. R20 என அழைக்கப்படும் புதிய பைக் Concorso d'Eleganza Villa d'Este நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் 2000சிசி ஏர்-ஆயில்-கூல்டு பாக்சர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தோற்றத்தில் இந்த பைக் அதிநவீன கிளாசிக் மோட்டார்சைக்கிள் போன்று காட்சியளிக்கிறது.

     


    இந்த மாடலில் அலுமினியம் ஃபியூவல் டேன்க் "ஹாட்டர் தன் பின்க்" நிறம் பூசப்பட்டுள்ளது. இத்துடன் பாலிஷ் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினியம் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பி.எம்.டபிள்யூ. R20 மாடலில் அதிநவீன எல்.இ.டி. ஹெட்லைட், 3D முறையில் அச்சிடப்பட்ட அலுமினியம் ரிங் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல். வழங்கப்படுகிறது. இந்த பைக்கின் முன்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல், பின்புறம் 17 இன்ச் பிளாக் டிஸ்க் வீல் வழங்கப்படுகிறது.

     


    சஸ்பென்ஷனுக்கு இருபுறமும் முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆலின்ஸ் பிளாக்லைன் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. 

    ×