search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boat crew"

    • மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகு குழாம் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் விடுமுறையின் போது குடும்பத்துடன் முட்டுக்காடு படகு குழாமுக்கு வந்து படகு சவாரி செய்வது வழக்கம்.

    குறிப்பாக பெண்கள், குழந்தைகளுடன் வரும் சுற்றுலா பயணிகள் முட்டுக்காடு படகு குழாமில் உள்ள மோட்டார் படகுகள், கால்களால் இயக்கக்கூடிய மிதி படகுகள், நீரில் பாய்ந்து செல்லக்கூடிய மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சவாரி செய்து மகிழ்வார்கள்.

    இந் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மிச்சாங் புயல் மழையின் காரணமாக பருவநிலையில் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதனால் எப்போதும் நீர் நிறைந்து காணப்படும் முட்டுக்காடு முகத்துவார பகுதி தற்போது நீர் வற்றி ஆங்காங்கே மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு தற்போது மோட்டார் படகுகள் மற்றும் மோட்டார் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து முட்டுக்காடு படகு குழாமில் படகுகளில் பயணிக்க ஆர்வமாக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மிச்சாங் புயல் போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாகபருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு முட்டுக்காடு முகத்துவாரத்தில் தண்ணீர் வற்றி உள்ளது. ஓரிரு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கலாம். இதன் காரணமாக மோட்டார் படகுகளை இயக்க முடியவில்லை. பொதுமக்களின் வசதிக்காக மிதி படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் ஒரு சிலர் மட்டுமே அந்த மிதி படகுகளை பயன்படுத்தி சவாரி சென்றனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
    • பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரி விக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தூர்வாரிடவும், மழைக்கா லத்திற் குள்ளாகவே ஏரிக்கு நீர் வரும் வழித்தட பகுதி களில் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணி களை மேற்கொண்டு ஏரி யில் அதிகப்படியான நீர் நிரம்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஏரியில் பெரியவர்களுக் கான நடைபாதை அமைத் திடவும், சிறியவர்கள் விளை யாடும் வகையில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகர ணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

    மேலும், சுற்றுலாத்தள மாக உருவாக்கிடும் வகை யில், ஏரியில் படகுகுழாம் அமைப்பதற்கு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட் டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், வருவாய் அலு வலர் தெய்வீகன்.சுற்று லாத்துறை அலுவலர் ஜனார்த்தனன், பொதுப் பணித்துறை உதவி பொறி யாளர் அய்யப்பன், கோலி யனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் வினோத். மற்றும் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • படகு குழாமில் வார விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
    • வெயிலில் நீண்டநேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில் வார விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விடுமுறை நாட்களான சுற்றுலா பயணிகள் அதிகளவில் படகு குழாமில் குவிந்திருந்தனர்.

    படகில் ஏறி பேரடைஸ் தீவுக்கு சென்று கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். இதனால் படகிற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

    அவர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருந்ததால் அவதியடைந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 2 நாட்கள் படகு குழாமில் ரூ.9 லட்சம் வருவாய் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×