என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Boat Sinks"
- ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி இறப்பு.
ஐரோப்பா நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கடலில் மூழ்கி 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகில் 170 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக மொரிடானியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக இடம்பெயர்வு உரிமைகள் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளது.
- ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.
- ஜனவரி மாதம் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏதென்ஸ்:
துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரை காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த கடற்பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்பு பணி சவாலாக உள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புதேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டிற்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 108 பேர் மீட்கப்பட்டதாக ஐநா அகதிகள் அமைப்பு கூறி உள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த மொசூல் பகுதி ராணுவத்தால் மீட்கப்பட்டது. அங்கு குர்தீஸ் இன மக்களின் ‘நவ்ரஸ்’ என்ற புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
எனவே அப்பகுதி மக்கள் விடுமுறையை பொழுதுபோக்கு பகுதிகளுக்கு சென்று கழித்து வருகின்றனர். நேற்று டைகிரிஸ் நதிக்கரையில் உள்ள சுற்றுலா தலத்துக்கு ஏராளமான மக்கள் படகுகளில் சென்றனர்.
அதில் ஒரு சொகுசு சுற்றுலா படகு நடுவழியில் சென்றபோது தண்ணீரில் மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் படகு முழுவதும் ஆற்றில் முழ்கியது.
இச்சம்பவத்தில் படகில் பயணம் செய்த 100 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் 61 பேர் பெண்கள். 19 பேர் குழந்தைகள் ஆவர்.
இவர்கள் தவிர 55 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என ஈராக் பிரதமர் அதெல் அப்தெல் மாக்டி தெரிவித்துள்ளார்.
படகு விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த படகு விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
அதிக ஆட்களை படகில் ஏற்றியதும், ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததும் விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே படகு கம்பெனியை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இக்கம்பெனியின் படகு போக்குவரத்துக்கு தடை விதித்தும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்த மொசூல் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக குர்தீஸ் இன மக்கள் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் இத்தகைய விபத்து நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #BoatAccident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்