என் மலர்
நீங்கள் தேடியது "body throw"
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தின் காலனி சுடுகாடு அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த உடல் அரை நிர்வாணமாக இருந்தது.
அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதையடுத்து அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை யாரேனும் கொலை செய்து இங்கு உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.