என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bomb explode"
- இறந்த நபர் யார் ? எதற்காக வந்தார் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும்.
கோவையில் கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் பலியான இடத்தை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உக்கடத்தில் காரில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. இதில் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார் ? யாருடைய கார் என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
காரில் இருந்த சிலிண்டர்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன. இறந்த நபர் யார் ? எதற்காக வந்தார் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும்.
6 குழுக்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரில் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சிலிண்டரை தவிர வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.
கோவையில் கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் பலியான இடத்தை போலீஸ் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சாலையில் வந்த கார் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. காரில் வந்த நபர் பலியாகி உள்ளார். அவர் குறித்து அடையாளம் தெரியவில்லை. அவர் குறித்து விசாரித்து வருகிறோம்.
கோவிலுக்கு அருகில் உள்ள சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவில் அருகே நடைபெற்றதால் அதிக கவனம் செலுத்துகிறோம். இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்பது விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். என்னென்ன பொருட்கள் காருக்குள் இருந்தது என ஆய்வு செய்து வருகின்றனர். சிலிண்டரை தவிர வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து வருகிறோம். இறந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான முழுமையான விவரம் மாலையில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்