என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bombay High Court"

    • 4 சட்ட கல்லூரி மாணவர்கள் வழக்கை தொடர்ந்திருந்தனர்
    • மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிப்பதை தவிர்த்தது நீதிமன்றம்

    உத்தர பிரதேச அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது.

    நாளை, ஜனவரி 22 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

    இந்தியாவில் 15 மாநிலங்கள் இந்நிகழ்ச்சிக்காக விடுமுறை அறிவித்தன. அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலமும் ஜனவரி 22 அன்று அரசு விடுமுறை என அறிவித்தது.

    ஆனால், இந்த விடுமுறையை எதிர்த்து 4 சட்ட கல்லூரி மாணவர்கள், பொதுநல வழக்கு (Public Interest Litigation) ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

    இன்று சிறப்பு அமர்வில், ஷிவாங்கி அகர்வால், சத்யஜித் சால்வே, வேதாந்த் அகர்வால் மற்றும் குஷி பாங்கியா எனும் 4 சட்ட கல்வி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள், ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.

    அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாவது:

    விடுமுறைகள் குறித்த முடிவுகள் மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. மதசார்பின்மைக்கு ஒத்து போகும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த மனுவில் அவ்வாறு மாநிலம் செயல்படவில்லை என காட்ட மனுதாரர்கள் தவறி விட்டனர். இந்த மனு, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல; பொது விளம்பர வழக்கு (publicity interest litigation). எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள் என கருதி, அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக, விசாரணைக்கு எடுத்து கொள்ளும் முன்பே வழக்கு குறித்த விவரங்கள் ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டதற்கு, தங்களுக்கும் அது தெரியாது என அவர்கள் பதிலளித்தனர்.

    • 2017 ஆம் ஆண்டு 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார்.
    • கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான்.

    தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

    2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார். கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குற்றத்திற்காக 2021 ஆம் ஆண்டு குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்சொரவி மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாங்கள் இதைவிட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை சந்தித்ததில்லை. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குச்சொரவிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

    • மாமியார் கொடுமையால் தான் தங்களது மகள் தற்கொலை செய்ததாக பெண்ணின் குடும்பத்தினர் புகார்
    • பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கணவன் வீட்டில் மாமியார் கொடுமைப்படுத்தியதால் மனைவி தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டுகள் கழித்து பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    தன் மாமியார் வீட்டில் துன்புறுத்தப்பட்டதால் தான் தங்களது மகள் தற்கொலை செய்துள்ளார் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் பெண்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

    எங்களது மகளின் தனிப்பட்ட சுதந்திரங்களை கணவனின் குடும்பத்தினர் பறித்தனர் என்று இந்த கிழக்கில் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினர். டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது, பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் வீடுகளுக்கு தனியாக செல்லக்கூடாது. கம்பளத்தின் மேல் தான் படுத்து தூங்க வேண்டும் என்று எங்கள் மகளை கணவனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர் என்று பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டினார்.

    இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

    விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக கணவன் வீட்டார் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டிவி பார்க்கக் கூடாது, கோவிலுக்கு தனியாக செல்லக்கூடாது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என்பதெல்லாம் கொடுமையின் கீழ் வராது என்று கூறி கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்தது.

    • வார்தா நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
    • இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    18 வயதுக்குட்பட்ட பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்களின் சம்மதத்துடன் கணவன் ஈடுபடும் பாலியல் உறவும் வன்கொடுமையாகவே கருதப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    கடந்த 2018 திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி சிறுமியின் சம்மதத்துடன் பல முறை பாலியல் உறவு வைத்து கொண்ட நபர் வீட்டில் வைத்து மாலை மாற்றி திருமணம் முடித்ததாக அப்பெண்ணை ஏமாற்றியுள்ளார். கர்ப்பமான அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதைக் கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் மீது வழிக்குத் தொடர்ந்தார்.

    இதன்படி அவர் மீது பதியப்பட்ட போக்ஸோ வழக்கின் கீழ் அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வார்தா மாவட்ட நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருட சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நீதிபதி கோவிந்த் சனாப் முன் கடந்த நவம்பர் 12 அன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரின் வக்கீல் பெண் சம்மதித்தே இருவருக்கும் உறவு இருந்ததாக வாதிட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி கோவிந்த், பெண்ணின் சம்மதமோ அவர் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி இருப்பதாலும் நடந்தது பலாத்காரம் அல்ல என்றாகிவிடாது.

    அவர்கள் இடையில் நடந்தது திருமணம் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு வைப்பது வன்கொடுமை என்றே கருதப்படும் என்று 10 வருட சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

    கற்பழிப்புக்கு ஆளான புற்றுநோய் பாதித்த சிறுமியின் கருவை கலைக்க மும்பை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. #BombayHighCourt #TeenCancer
    மும்பை:

    20 வாரங்களுக்கு மேல் வளர்ச்சி அடைந்த கருவை சட்டப்படி கோர்ட்டு அனுமதி பெற்றால் மட்டுமே கலைக்கமுடியும். இந்தநிலையில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரின் தந்தை தன் மகளின் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகினார். சிறுமிக்காக வாதாடிய வக்கீல், ’சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 2010-ம் ஆண்டு முதல் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி 24 வார கர்ப்பமாக இருப்பது தற்போது தான் தெரியவந்தது. அவரின் கருவை கலைக்க அனுமதி அளிக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒகா மற்றும் சோனக் அடங்கிய அமர்வு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவ குழுவுக்கு உத்தரவிட்டனர். அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் கருவை கலைக்க அவர்கள் அனுமதி வழங்கினர்.

    மேலும் வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வக்கீல், ‘சிறுமி பள்ளிக்கு சென்று படித்து வந்ததாகவும், இந்த நிலையில் அவர் கற்பழிப்புக்கு ஆளானதால் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டதாகவும்’ தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, அவளின் பெற்றோர் மாநில சட்ட சேவை ஆணையத்தை அணுகி சட்ட உதவி மற்றும் சிறுமியின் கல்விக்கு தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.  #BombayHighCourt #TeenCancer 
    மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீம் பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதால் பரோலில் விட முடியாது என மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #BombayHighCourt #AbuSalem
    மும்பை:

    மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர் அபு சலீம் (வயது 46). இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் கவுசர் பகர் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளார். எனவே இதற்காக தனக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

    எனவே இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் அவர் முறையிட்டார். இந்த மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி வி.கே.தகில்ரமணி, நீதிபதி எம்.எஸ்.சோனாக் ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பதால் அபு சலீமை பரோலில் விட முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரது பரோல் மனுவை தள்ளுபடி செய்தனர்.  #BombayHighCourt #AbuSalem  #tamilnews
    ×