search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boost Immunity"

    • நன்கு சமைத்த, சூடான மற்றும் சுகாதாரமான உணவை உண்ணுங்கள்.
    • கோதுமை, பார்லி மற்றும் பருப்பு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    மாறிவரும் காலநிலையால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. குளிர்காலமாக இருந்தாலும் அல்லது கோடைகாலமாக இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி மற்றும் இருமலுடன் சில சமயங்களில் சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நம் உடலில் வரும் எந்த நோயையும் எதிர்த்து போராட முடியும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இரண்டு முக்கியமான விஷயங்கள் உடற்பயிற்சி மற்றும் தூக்கம். ஆனால் அதைவிட முக்கியமானது சரியான ஊட்டச்சத்து.

    நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய சில பொதுவான உணவுகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறுகையில்,

    நன்கு சமைத்த, சூடான மற்றும் சுகாதாரமான உணவை உண்ணுங்கள். அதிகப்படியான மிளகாய் கொண்ட கொழுப்பு மற்றும் காரமான உணவு அனைவருக்கும் பொருந்தாது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.

    தயிர்:

    தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. எனவே உணவில் தயிர், லஸ்ஸி, தயிர் பச்சடி, மோர், பனீர் ஆகியவற்றை எப்போதும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    அக்ரூட், பாதாம் பருப்புகள்:

    பூசணி, சூரியகாந்தி விதைகள், அக்ரூட், பாதாம் பருப்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் ஈ மற்றும் பி6 மற்றும் மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. உணவில் இந்த கலந்த விதைகளை 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பழங்கள் - காய்கறிகள்

    சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளிலும் ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, குடைமிளகாய் மற்றும் பச்சை இலை காய்கறிகளிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

    பருப்பு வகைகள்

    கோதுமை, பார்லி மற்றும் பருப்பு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அவை உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, ஊட்டச்சத்துக்களால் உடலை நிரப்புகின்றன. 

    ×