என் மலர்
நீங்கள் தேடியது "boot camp"
- ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
- எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூர் எஸ்.எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் மணிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி மேலாளர் தேவராஜ், உதவி இயக்குனர் சிவஅய்யனன், கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சிறு தொழில் தொடங்குவது குறித்தும், அதனை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி காண்பது குறித்தும், அதில் பின்பற்றக்கூடாத நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் பேசினர். எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.