search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booth committee"

    • மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ. தி.மு.க. சார்பில் காரணைப் புதுச்சேரி, பெருமாட்டுநல்லூர் மற்றும் காயரம்பேடு ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் கஜா என்ற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    காயரம்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம். எல்.ஏ. தன்சிங், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், காயரம்பேடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திருவாக்கு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக பிரிவு செயலாளருமான செல்ல பாண்டியன் கலந்துகொண்டு பூத் கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் 11 பூத் கமிட்டி நிர்வாகிகளும், பெரு மாட்டுநல்லூர் ஊராட்சியில் 6 பூத் கமிட்டி நிர்வாகிகளும், காயரம்பேடு ஊராட்சியில் 7 பூத் கமிட்டி நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கிளை பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மதன்சிங் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் வேங்கடமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நிர்வாகிகள் ரங்கன், பொன்.தர்மராஜ், துளசிங்கம், கார்த்திக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தானில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப் பட்டி தெற்கு ஒன்றிய செய லாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார்.

    சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இனை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாணிக் கம், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அனை வரையும் வரவேற்றனர்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    இதில் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன்ஜூஸ் கடை கென்னடி, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, கிளை நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

    • பூத் வாரியாக பூத் கமிட்டி ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்டம் மானூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சீதபற்பநல்லூர், வெள்ளாளங்குளம், வல்லவன் கோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பூத் எண்கள் 140,141,142,138,116,117 ஆகியவற்றிற்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பூத் வாரியாக பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    இதில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர். இதில் மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், ஓட்டுனரணி செய லாளர் சிவந்தி ராஜேந்திரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே திருவேடகம் மன்னாடி மங்கலம் குருவித்துறை தாமோதரன் பட்டி இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி கிராமத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் பெருந்தலைவர் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன் சிலர் அகிலா ஜெயக்குமார், மகளிரணி மாவட்ட செய லாளர் லட்சுமி, வடக்கு ஒன்றிய செயலாளர் காளி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவைத்தலைவர் முனியாண்டி வரவேற்றார்.

    திருவேடத்தில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

    திருவேடகம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணி என்ற பெரியசாமி முள்ளிப் பள்ளம் கிராமத்தில் சேது முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் பாண்டியம்மாள், மன்னாடிமங்கலம் கிரா மத்தில் கிளைச் செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை கிராமத்தில் மகளிரணி வனிதா உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும் கூட்டம் வார்டு வாரியாக நடை பெற்றது.
    • 11 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகளை, எஸ்.பி. சண்முக நாதன் சந்தித்து ஆலோசனை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமை க்கும் பணியை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து அதனை விரைந்து முடிக்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதியில் இளை ஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி மற்றும் அ.தி.மு.க. பூத் கமி ட்டி அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஆலோ சனை வழங்கும் கூட்டம் வார்டு வாரியாக நடை பெற்றது. மத்திய வடக்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் ஜெய் கணேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி. சண்முக நாதன் கலந்து கொண்டு 11 வார்டுகளில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்தும், பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, முன்னாள் தொகுதி இணை செயலாளர் பெருமாள், மாவட்ட பிற அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், பிரபாகர், பகுதி செய லாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன், பகுதி துணை செயலாளர் செண்பக செல்வன், வட்ட செய லாளர்கள் திருச்சிற்ற ம்பலம், நவ்சாத், ஜெயக்குமார், ஈஸ்வரன், உதயசூரியன், ரகுநாதன், ராஜன், அந்தோணிராஜ், ரெங்கன், பொன்சிங், வக்கீல் முனிய சாமி, சரவண பெருமாள், சிவசங்கர், சரவணன், ரமேஷ், செண்பகராஜ், ராஜ்குமார், தலைமை நிலைய பேச்சாளர் முருகானந்தம், டைகர் சிவா, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, மெஜூலா, பகுதி மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி, நிலா சந்திரன், கொம்பையா மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு சகாயராஜா, ராஜா, ஆனந்த், ரியாஸ், மைதீன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு தெற்கு ஊராட்சி ஒன்றியம் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் 2024 நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், சரவணன், கருப்பையா, மாணிக்கம், அம்மா பேரவை நிர்வாகி வெற்றி வேல், மாவட்ட பொரு ளாளர் திருப்பதி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதும்பு, அதலை உள்ளிட்ட பல கிராமங்களில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    • எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
    • தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.

    சென்னை:

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.

    இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறேன். அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருது நகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது. காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை. இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
    • அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைம யில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டன. வளநாடு கிரா மத்தில் நடந்த பூத் கமிட்டி அமைக்க நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவாட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றதலைவரும், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளருமான செந்தில்குமார் வரவேற்றார். பூத்கமிட்டி உறுப்பி னர்களுக்கு நோட்டுகளை வழங்கி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசிய தாவது:

    தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. நகர் பகுதிகளில் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் கூட குடும்பம் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி.தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்றார். ஆனால் அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முது குளத்தூர் நகர் செயலாளர் ஷங்கரபாண்டியன், அபிராமம் கர்ணன், கண்ணன், பூசேரி சதிஸ் மிக்கேல், முத்துமணி, கருப்பசாமி, கவுன்சிலர் அர்ச்சுனன் , சித்திரைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண் டோ, திருவாடா னை தொகுதி எம்.எல்.ஏ. ராம.கருமாணிக்கம், மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்லதுரை அப்துல்லா, மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் மாவீரன் வேலுச்சா மி, மாநிலச் செயலாளர் ஆனந்தகுமார், மூத்த நிர்வாகிகள் துல்கீப் கான், ஆர்ட் கணேசன், காவனூர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கோடனூர் கணேசன், தட்சிணா மூர்த்தி, மனோகரன், சுப்பிர மணியன், அன்வர் அலி நத்தர், கந்தசாமி, சேது பாண்டியன், கிருஷ்ண மூர்த்தி, சுப்பிரமணி, சுரேஷ் காந்தி, நகர் காங்கிரஸ் தலைவர்கள் கோபி, ராஜீவ் காந்தி, பேரூர் காங்கிரஸ் தலைவர்கள் காத்த ராஜா, முகமது காசிம் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி தலைவர்கள், மாவட்ட துணை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • ஒத்தவீடு கிளை செய லாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணலூர் ஊராட்சி பூத் எண். 39, 40-ன் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சோனைரவி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் மணலூர் மணி மாறன் முன்னிலை வகித்தார்.

    மானாமதுரை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாக ராஜன், வருகிற நாடாளு மன்ற தேர்தலில் வெற்றி பெறவும், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர், மகளிர் உறுப்பி னர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர் பான ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் அழகுமலை, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவா, மணலூர் கிளை செயலாளர்கள் வீர மணி, அழகர், பிரபு, தயாளன், வெங்கட்ரமணி, மண லூர் ஒத்தவீடு கிளை செயலாளர்கள் ராஜ், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் ஆலோசனைகள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக 42-வது வார்டில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கே.வி.ஆர். நகரில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும்,மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக இளைஞரணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

    மேலும் வருகின்ற காலங்களில் புதிய வாக்காளர்கள் அதிமுகவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.அதற்கு கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகம் அறிவித்துள்ளபடி பூத் கமிட்டியில் அதிக அளவில் இளைஞர்கள் இடம் பெற வேண்டும்.அதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் அணி நிர்வாகிகள் என ஒரு கலவையான பூத் கமிட்டியை அமைக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் 42-வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    குன்னூர் நகரத்திற்கு உட்பட்ட 5 வாக்கு சாவடிகளின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக் ஆலோசனைப்படி குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி தலைமையில், குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர் செல்வம், நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நகர அவை தலைவர் தாஸ், துணைச் செயலாளர்கள் சாந்தா சந்திரன், வினோத், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், மாவட்ட பிரதிநிதிகள் மணிகண்டன், சார்லி மற்றும் கழக நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

    ×