என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "boy missing"
- அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார்.
- ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஏ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 30) ,லாரி டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3½ வயதில் ரிதன் என்ற மகன் உள்ளார்.
சிறுவன் மாயம்
இந்நிலையில் மஞ்சுளா தனது மகன் ரிதனுடன் அதே பகுதியில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் மாலை அவர்களது வீட்டிற்கு செல்ல ஆயத்த மானபோது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ரிதன் திடீரென மாய மானான். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா அவர்களது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை தேடி உள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுவன் மாயமான சம்பவம் குறித்து காங்கேயம் போலீ சில் புகார் செய்தனர்.
தேடுதல் வேட்டை
இதையடுத்து அங்கு வந்த காங்கேயம் டி.எஸ்.பி., முத்து குமரன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள அனைத்து வீடுகள், வீட்டு மொட்டைமாடி, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பல இடங்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் தேடுவதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருடன் இணைந்து காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் 3 மணி நேரத்துக்கு மேலாக ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போலீசார் விசாரணை
நேற்று முன்தினம் முதல் இன்று வரை தேடியும் ரிதனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான் , யாராவது அவனை கடத்தி சென்றா ர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கயம் ஏ.சி.நகர் பகுதியில் உள்ள கிணறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் ரிதன் கிடைக்காததால் அவனை மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகி க்கின்றனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
பி.ஏ.பி. வாய்க்கால்
இதனிடையே ரிதன் விளையாடிய இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் பி.ஏ.பி. வாய்க்கால் செல்கிறது. இதனால் ரிதன் அங்கு சென்றதன் காரணமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டிருக்கலாமா என்று போலீசார் விசாரணை நடத்தி பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரிதனின் புகைப்படத்தை போலீசார் சமூகவலைதளங்களில் பதிவிட்டும் தேடி வருகின்றனர்.
வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமான சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- கள்ளக்குறிச்சி அருகே சிறுவனை கடத்தி ரூ. 1 கோடி கேட்டு மிரட்டிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
- அதிர்ச்சி அடைந்த லோக–நாதன் தனது மகனை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையம் போலீஸ் சரகம் அக்கரா பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், அவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இவர்கள் அைனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். மறுநாள் அதிகாலை சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இளைய மகன் தருண் ஆதித்யாவைக காணவில்லை. அதிர்ச்சி அடைந்த லோகநாதன் தனது மகனை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.பதறி போன லோகநாதன் இதுகுறித்து கச்சிராயப் பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தலைமையில் 3 தனிப் படைகள் அமைத்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று மர்ம நபர் ஒருவர் தருண் ஆதித்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.1 கோடி கொடுத்தால் சிறுவன் தருண் ஆதித்யாவை ஒப்படைப்ப–தாக கூறியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித் தார்.இதன் பேரில், பெண்கள், குழந்தைகள் குற்றங்கள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. திருமேனி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ஆனந்தராசு ஆகியோர் தலைமையிலான போலீசார் மோட்டார் சைக்கிளில் சாதாரண உடையில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே பங்காராம் கிராமத்தில் சாலையோரம் மறைவாக நின்ற கார் மீது சந்தேகப்பட்டு, காரின் அருகே சென்று பார்த்தபோது சிறுவன் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, சிறுவனை மீட்ட போலீசார் காரில் இருந்த அக்கரைகாடு ஊத்தோடை பகுதியை சேர்ந்த சுந்தரேசன், கச்சிராயப் பாளையம் பகுதி யைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய், கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இந்த கும்பல்தான் சிறுவனை கடத்தி ரூ.1 கேட்டு மிரட்டியது தெரியவந்தது. அதனை தொடந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ரகுபதி என்பவரைத் தேடி வருகின்றனர். பின்னர், சிறுவன் தருண் ஆதித்யாவை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு 3-வது தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் முத்தையா (வயது15). படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தான். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சென்று உள்ளான். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பதறிபோன சேகர் தேனி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவன் என்ன ஆனான்? பணத்துக்காக கடத்தப்பட்டானா? எங்கு சென்றான்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை திப்புராயப்பேட்டை ராஜீவ்காந்தி நகர் நாய்பட்டி சந்து பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் வேல்முருகன் (வயது 17).
பள்ளிக்கூடத்துக்கு செல்லாத இவர், பெற்றோருக்கு கட்டுப்படாமல் சுற்றி திரிந்ததால் வேல் முருகனை அவரது பெற்றோர் உப்பளத்தில் ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.
ஆனால், வேல்முருகன் காப்பகத்தில் இருந்து அடிக்கடி வெளியேறி பின்னர் காப்பகத்துக்கு திரும்புவது வழக்கம்.
அதுபோல் கடந்த சில நாட் களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற வேல்முருகன் அதன் பிறகு காப்பகத்துக்கு திரும்பவில்லை. அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விசாரித்த போது அங்கு வேல்முருகன் செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து காப்பக நிர்வாகி லில்லிபுஷ்பம் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான வேல்முருகனை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்