search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brammah"

    • வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.
    • பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    யுகங்கள் ஆரம்பிக்கும் முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா படைக்கப்பட்டார், லகங்களையும், உயிர்களையும் தோற்றுவிக்கவே இவர் படைக்கப்பட்டார்.

    அதன்படி வேதங்களின் உதவியுடன் தன் படைப்பு வேலையைச் செய்த வந்தார்.

    பிரம்மா நல்லவர்களையும், தீயவர்களையும் தோற்றுவித்தார், நல்ல குணம் உடைய தேவர்கள், தீய குண்ட கொண்ட அசுரர்களுக்குத் தொல்லையாகத் தோன்றினர்.

    எனவே பிரம்மா இனி தேவர்களைப் படைக்கக் கூடாது என்பதற்காக மது, கைடபர் என்ற இரண்டு அசுரர்கள் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து அபகரித்துச் சென்று விட்டனர்.

    வேதங்கள் இல்லாததால் பிரம்மாவால் தன்னுடைய படைப்புத் தொழிலைத் தொடர முடியவில்லை.

    பிரம்மா பகவானிடம் முறையிட்டார்.

    பகவான் விஷ்ணு, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீஹயக்ரிவராக அவதாரம் செய்து வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டு, பிரம்மாவிடம் கொடுத்து படைப்பு தொழிலை தொடரச் செய்தார்.

    சகலவல்லியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு எல்லா வேதங்களையும், வித்தைகளையும், கல்விச் செல்வங்களையும் ஸ்ரீ ஹயக்ரிவரே அளித்து அருளினார்.

    கல்வியில் வெற்றி பெற மாணவ-மாணவிகள் ஸ்ரீ ஹயக்ரிவ பகவானை தினமும் வேண்டிக் கொண்டு சுவாமி தேசிகனின் கீழ்க்கண்ட துதியைச் சொல்லி வர வேண்டும்.

    "ஞாநாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்

    ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரிவம் உபாஸ்மஹே"

    • சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.
    • பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

    சிவன் வடிவில் அம்பாள்; அம்பாள் வடிவில் சிவன்: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார்.

    இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்" உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார்.

    அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள்.

    சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.

    ஆனால், அம்பிகை சிவனிடம், "நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!" என்றாள்.

    சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.

    சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.

    பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

    இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர்.

    பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

    • பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம்பொருளின் ஆனந்தக்கூத்து தரிசனம் பெற்றனர்.
    • திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சிதம்பரம் தலத்தில் பரம் பொருளின் ஆனந்தக் கூத்து தரிசனம் பெற்றனர்.

    இதை அறிந்த தெய்வங்களும் தேவர்களும் சிவானந்தக்கூத்து காண விரும்பினார்கள்.

    பிரம்மன் விஷ்ணு லட்சுமி சரஸ்வதி பராசக்தி இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் பூமியில் உள்ள தில்லை வனத்தை அடைந்தனர்.

    ஆகாயத்தலத்துப் பொன்மேனி அழகனைத் தொழுது போற்றிப் பூஜை செய்து வழிபட்டனர்.

    தில்லையம்பலத்தை பொன்னம்பலமாக்கிப் பொற்கூரை வேய்ந்து திருப்பணி செய்தனர்.

    திருக்கூத்து தரிசனம் அருளிச் செய்யுமாறு ஈசனை நோக்கித் தவம் புரிந்தனர்.

    பரமேஸ்வரன் மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று (ஆருத்திரா) தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்து அருளினார்.

    ஆனந்த நடராஜரின் திருக்காட்சி கண்டு ஆடிப்பாடி மகிழ்ந்த தேவர்களும், தேவியர்களும் விழுந்து வணங்கிப் பணிந்தனர்.

    பிரம்மன் இறைவனது திருநடனத்திற்கு கீதம் பாடலானார். மகாவிஷ்ணு புல்லாங்குழல் ஊதினார்.

    ருத்திரன் மிருதங்கம் வாசித்தார். பராசக்திபாடினாள். சரஸ்வதி வீணை வாசித்தாள்.

    லட்சுமி தாளம் போட்டாள். நந்தி குடமுழா இயக்கினார்.

    இவ்வாறு எல்லோரும் கண்டு களித்துப்பணி புரியப் பரமன் தெய்வங்களுக்கும் தேவர்களுக்கும் ஆனந்த நடனக் காட்சியளித்தார்.

    • சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.
    • சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத் தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.

    விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க, அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தை காண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும், இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர் கொண்டு பூலோகம் வந்து கடும் தவம் செய்தார்.

    தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான்.

    நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார்.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.

    அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.

    கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.

    அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.

    அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

    சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108.

    இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48.

    ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன.

    மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.

    இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை.

    மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும்.

    ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம்.

    இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.

    சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவர்.

    அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.

    அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதி தேவியாக்கி இறைவனை வழிப்படனும்.

    அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்.

    இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும்.

    காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கணும்.

    சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கணும்.

    ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது.

    சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

    இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம்.

    இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம்.

    • அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.
    • இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும்.

    ராவணின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.

    பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்திருளினார்.

    திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலை கடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது.

    இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார்.

    இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும். மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

    ஒருவருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மகா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    அம்பரீஷ மகாராஜாவை திருமாலின் சுதர்சன் சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

    திருக்குறுங்குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வு பெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராட்சசனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

    ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்த விரத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்ற பெரும் பயனனை ரும்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

    பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்த விரதத்தை செய்ய முடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பட்ச ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டில் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.

    பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    குருசேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.
    • அந்த மலையைப் பூஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய லிங்க வடிவெடுத்து காட்சி தந்தார்.

    திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர்? என்று விவாதித்தனர்.

    அவர்கள் மத்தியில் ஒளிப் பிழம்பாக, பிரம்மாண்ட வடிவில் பரமேஸ்வரன் தோன்றினார்.

    அந்த ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் காண முடியாது நான் முகனும், நாராயணும் திகைத்தனர்.

    பரமேஸ்வரனே பரம்பொருள் என்று போற்றினர்.

    அவர்கள் பக்திக்கு இறங்கி ஒரு மலை வடிவானார் சிவ பெருமான்.

    அந்த மலையைப் பூஜிப்பதும் கடினம் என்பதால், தானே ஒரு அழகிய சிவலிங்க வடிவெடுத்து காட்சி தந்தார்.

    இந்த சிவலிங்கத் திருமேனியே ஸ்ரீ அருணாசலேசுரர் ஆகும்.

    • பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.
    • ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.

    அருணா நதிக்கரையில் தங்களின் பஞ்சசேத்திரங்கள் அமைத்து அருள்பாலிக்குமாறு நான்முகனும் சரஸ்வதியும் வேண்டிக்கொண்டனர்.

    பிரம்மன் வழிபட்ட இடம் பிரம்மகிரி என்னும் அழகிய மலைப்பிரதேசமாகும்.

    மூலசேத்திரமாக விளங்குவது சுருட்டப்பள்ளி ஆகும். இங்கு வால்மீகிஸ்வரராக காட்சி தருகிறார்.

    சிவசயன சேத்திரத்தில் தத்புருஷமூர்த்தியாக விளங்குகிறார்.

    மேற்கில் சத கூடாத்திரி என்னும் ராமகிரி, இந்த சேத்திரத்தில் ஈஸ்வரன் ஈசான மூர்த்தியாக வாலீஸ்வரராக விளங்குகிறார்.

    கிழக்கு புறத்தில் விசங்கடம் என்னும் வடதில்லையில் அகோர மூர்த்தியாக ஸ்ரீ பாபஹரேஸ்வரேர் என்ற திருநாமத்துடன் ஈசன் வீற்றிருக்கிறார்.

    அரியதுரையில் வாமதேவ மூர்த்தியாக ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் அருள்பாளிக்கிறார்.

    ஐந்தாவதாக சத்யேஜாதக மூர்த்தியாக சிந்தாமணியில் இருப்பது புராணவரலாறு.

    இவ்வாறு உண்டான பன்ச சேத்திரங்களில் ரகசிய சேத்திரம் என்றும், காலகூடசேத்திரம் என்றும் அழைக்கப்படுவது தான் சுருட்டப் பள்ளியாகும்.

    • நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.
    • கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

    நான்முகக் கடவுள் ஓர் யாகம் செய்து பரமனின் அருள்பெற எண்ணினார்.

    வாக்தேவியான கலைமகளும் பிரம்மனும் தற்போதுள்ள சுருட்டபள்ளிக்கு மேற்கே ஒரு மலை பிரதேசத்தை அடைந்தனர்.

    சரஸ்வதி தேவி மலையில் இயற்கை அழகை கண்டு ரசித்து வெகுதூரம் சென்றுவிட்டாள்.

    பிரம்மன் செய்ய வேண்டிய நல்ல வேளை நெருங்கிவிட்டது.

    கலைமகள் அருகில் இல்லை. அதனால் உரத்த குரலில் கூவி அழைத்தும் கலைமகள் வரவில்லை.

    அதனால் சரஸ்வதி தேவியை தர்ப்பையில் ஆவாஹனம் செய்து அக்னியை மூட்ட ஆயத்தமானார்.

    இந்த விஷயம் கலைமகளின் நினைவிற்கு நினைவில் வந்தது.

    உடனே சூஷ்ம சரீரத்தில் அரணி என்னும் கட்டையில் புகுந்தாள்.

    அக்னிமூட்டி தொடங்கிய வேள்வியில் இருந்து நீர் பாயத்துவங்கியது.

    இதைக்கண்ட தேவர்களும், முனிவர்களும் அதிசயம் அடைந்தனர்.

    கலைவாணி நான்முகன் காலில் விழுந்து, சுவாமி, தங்களுக்கு உண்டாகும் சினம் தணிவதற்காகவே தண்ணீராக உருவெடுத்ததாக கூறி மன்னித்தருளும்படி வேண்டினாள்.

    அனைவரும் இதனை ஈஸ்வரனின் விருப்பம் என்று எண்ணினர்.

    கயிலை நாதனும் காட்சி தந்து வேண்டிய வரம் அருளினார்.

    • அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.
    • இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலை செய்யும் விஷ்ணுவும்

    நானே பெரியவன் என்று வாதாடிப் போரிட்டனர்.

    அந்நிலையில், சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றினார்.

    அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது.

    இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர்.

    அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று

    விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார்.

    இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

    • பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.

    இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.

    எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.

    தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

    ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

    பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.

    மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    ×