search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breast cancer awareness rally"

    பெசன்ட் நகரில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
    சென்னை:

    பெசன்ட் நகரில் சர்வதேச மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சுந்தரம் மெடிக்கல் பவுண்டே‌ஷன்-கேன் ஸ்டாப் சார்பில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பலூன்களை பறக்க விட்டு, புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இரத்த தான முகாம், மருத்துவ முகாம், இயற்கை உணவு முகாம் ஆகியவற்றை பார்வையிட்டு, மாபெரும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபேரணியை துவக்கி வைத்தார்.

    அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பக பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மட்டுமல்லாமல் பொது மக்கள் தாமாகவே முன்வந்து தொற்றா நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து கொள்கின்றனர். 2012 ஜூலை மாதம் முதல் இதுவரை 2.26 கோடி பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் செய்து கொண்டதில் 2.34 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோயிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
    ×