என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Breastfeeding Week"
- பெட்டகம், குழந்தை வளர்ப்பு கையேடு வழங்கினார்
- அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது.
கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்ட முன்னெடுப்பாகவும் மற்றும் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் தாய்ப்பால் வார விழாவில் பிறந்த பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து கையேட்டினையும் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 'பெண் குழந்தைகளை காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தின் கீழ் ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 1.8.2023 முதல் 7.8.2023 வரை தாய்ப்பால் வார விழாவில் பிறந்த 25 பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் தாய்மார்களை பாராட்டி குழந்தை நலப் பெட்டகம், மரக்கன்றுகள் மற்றும் பச்சிளம் சிசு வளர்ப்பு குறித்து கையேடுகளையும் கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதம் காலத்திற்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மேலும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் தவறாமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அளவான குடும்பத்திற்கு 2 குழந்தைகளே போதுமானது. இதனை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ நலப்பணிகள்) டாக்டர் சாரா செலின்பால, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி , அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் பாஸ்கர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர்.
- சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே அவர்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளாக வளர உதவுகிறது என்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் திண்டுக்கல் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவி நிஷா தேவி தலைமை தாங்கினார். செயலாளர் கிஷோர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் ஹரி கிருஷ்ணன், உமாதேவி, அன்புச்செல்வன், குழந்தை நல மருத்துவர் டாக்டர் பாலாஜி பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப்பால் கொடுக்கும் வழிமுறைகள் ஆகியவை குறித்து டாக்டர்கள் எடுத்துரைத்தனர். மேலும் குழந்தைகள் வளர்ப்பில் தாய்மார்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். சிறு வயதில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரோக்கியமான உணவுகளே அவர்கள் நோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு ஆரோக்கியமான குழந்தைகளாக வளர உதவுகிறது என்றனர்.
தொடர்ந்து நடந்த விழாவில் 50 கொழுகொழு குழந்தைகளின் தாய்மார்களுக்கு பரிசுகளும், புரோட்டின் பவுடர்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேவை திட்ட இணைச்செயலாளர் சண்முகம், மண்டல ஒருங்கிணைப்பாளர் காலிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு, சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
- பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய மேற்கு நடுநிலைப்பள்ளியில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது, அதை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, இந்த விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு வகைகள், இரும்பு சத்துள்ள உணவு வகைகள். சத்தான காய்கறிகள் போன்றவைகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த பேரணியில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துராம லட்சுமி, மேற்பார்வையாளர் லட்சுமி , உதவியாளர் யோக பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.
- தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்
- ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதார மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் சிவப்பிரியா முன்னிலை வகித்தார். தாய்ப்பாலின் அவசியம் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ஷாமிலி தாய்மார்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தானியங்கள் பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தலைமை செவிலியர் தனம் செவிலியர்கள், முபாரக் பேகம், தமிழ்செல்வி, கோகுலவாசன், மீனாட்சி, சீதா, சுதாமதி, உமா, பிரியங்கா மற்றும் 50-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்