என் மலர்
நீங்கள் தேடியது "Broadband"
- ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட பெரியது.
- ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை 200Mbps வேகத்தில், 3.3TB டேட்டா வழங்குகிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இந்திய சந்தையில் முன்னணி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கிறது. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் திட்டத்தில் பயனற்கள் 40Mbps துவங்கி அதிகபட்சம் 1Gbps வரையிலான இணைய வேகத்தில் ஏராளமான சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
பட்ஜெட் மற்றும் பயன்பாட்டிற்கான தேவைக்கு ஏற்ப பயனர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் வழங்கி வருகிறது. இதில் ஒடிடி பலன்களை வழங்கும் சலுகைகளும் அடங்கும். அந்த வகையில், ஏராளமான ஒடிடி பலன்களை கொண்ட பிராட்பேன்ட் இணைப்பு தேவைப்படும் பட்சத்தில் ஏர்டெல் சேவையை தேர்வு செய்து சிறப்பானதாக இருக்கும்.

ஏர்டெல் சேவை நாடு முழுக்க வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவு மற்ற நிறுவனங்களை விட அளவில் பெரியது ஆகும். இதன் காரணமாக பிராட்பேன்ட் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை விரைந்து சரி செய்து கொள்ள முடியும். ஒடிடி பலன்களை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ரூ. 999 சலுகை பலன்கள்:
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 999 சலுகையில் 200Mbps வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு மாதம் 3.3TB வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் ஃபிக்சட் லைன் காலிங் வசதி வழங்கப்படுகிறது. லேன்ட்லைன் சாதனத்தினை வாடிக்கையாளரே வாங்கிக் கொள்ளலாம்.
இவை தவிர இந்த சலுகையில்- அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர், விஐபி சர்வீஸ், அப்போலோ 24|7 சர்கில் சந்தா மற்றும் வின்க் பிரீமியம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
- ஜியோ ஏர் ஃபைபர் சேவை முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
- தமிழகத்தின் 21 மாவட்டங்களில் தற்போது ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவை கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிராட்பேண்ட்-போன்ற இணைய சேவையை ஜியோ 5ஜி கனெக்டிவிட்டி மூலம் வழங்குவதே ஜியோ ஏர் ஃபைபர் சேவை ஆகும். முதற்கட்டமாக குறைந்த நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஏர் ஃபைபர் சேவை தற்போது நாடு முழுக்க 115 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஜியோ ஏர் ஃபைபர் சேவை மேற்கு வங்காளம், தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிடைக்கிறது. இந்த மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆம்பூர், மதுரை, கரூர், நாமக்கல், நெய்வேலி, பொள்ளாச்சி, சேலம், கோயம்புத்தூர், ஓசூர், கும்பகோணம், திருச்சி, திருப்பூர், ஸ்ரீரங்கம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் ஜியோ ஏர் ஃபைபர் சேவை வழங்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஜியோ ஏர் ஃபபைர் சேவைக்கான கட்டணம் மாதம் ரூ. 599 என துவங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சலுகையில் 30Mbps வரையிலான இணைய வேகம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலிவ் உள்பட 11 ஒ.டி.டி. சேவைக்கான சந்தா, 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர ஜியோ ஏர் ஃபைபர் சேவை ரூ. 899, ரூ. 1199, ரூ. 1499, ரூ. 2499 மற்றும் ரூ. 3999 விலைகளில் வழங்கப்படுகின்றன. ரூ. 3999 சலுகை 30 நாட்களுக்கான வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 1Gbps வேகம் கொண்ட இணைய சேவை, அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ் மற்றும் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைக்கான சந்தா மற்றும் 550 டி.வி. சேனல்கள் வழங்கப்படுகின்றன.
- இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது.
- இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்டு இருந்த பிராட்பேண்ட் இணைய சேவைகள் நிபந்தனையுடன் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சாமானிய மக்கள், சுகாதார வசதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிராட்பேண்ட் சேவைகள் மட்டும் வழங்கப்படும் நிலையில், மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. வன்முறை அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி ஏழு மாவட்டங்களில் இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது.
"இணையத் தடை காரணமாக முக்கிய அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு பிராட்பேண்ட் சேவைகளின் விஷயத்தில் இடைநீக்கத்தை நிபந்தனையுடன் நீக்கும் முடிவை எடுத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு சந்தாதாரர் அனுமதிக்கப்பட்ட இணைப்பைத் தவிர வேறு எந்த இணைப்பையும் ஏற்க மாட்டார், மேலும் வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட்கள் அனுமதிக்கப்படாது. மேலும் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.





