என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bronze statue"
- சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது.
- டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.
நெய்வேலி:
நெய்வேலியில் இன்று ஜெயலலிதா முழு உருவ சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க. மற்றும் என்.எல்.சி.அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது.
இதற்கு கடலூர் தெற்கு மாவட்டசெயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட, நகர ஒன்றிய, சார்பு பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
சிலை திறப்பு விழாவுக்காக வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வழி நெடுகிலும் விளம்பர பேனர் கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்கள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு சாலையின் இருபுறத்திலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும் நெய்வேலி டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.
இது தவிர விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்துவைத்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி விழா மேடை யில் பேச உள்ளார்.
- ரூ.50 லட்சத்தில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு வெண்கல சிலை அமைக்க பூமிபூஜை செய்யப்பட்டது.
- வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.
மதுரை
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு பின்னனி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர் டி.எம்.சவுந்தர ராஜன். வெண்கல குரலில் கணீரென இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள சாலைக்கு அவரது பெயரை தமிழக அரசு அண்மையில் சூட்டியது.மேலும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரின் சொந்த ஊரான மதுரையில் அரசின் சார்பில் டி.எம்.சவுந்தரராஜனின் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார்.
அதன்படி மதுரை முனிச்சாலை சந்திப்பில் டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கல சிலை ரூ.50 லட்சத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், வெங்க டேசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் முகேஷ் சர்மா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முனியசாமி, புகழ் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடையத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்
- கூட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
கடையம்:
கடையத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.
கடையம் வடக்கு வட்டார தலைவர் அழகு துரை, தெற்கு வட்டார தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடவும் சுமார் ரூ.30 லட்சம் செலவில் 8½ அடியில் பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ வெண்கலச் சிலை கடையம் மெயின் ரோட்டில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் விரைவில் நிர்வாகிகள் கூடி சிலை அமைப்பு கமிட்டி உருவாக்கி, ஒருவருடத்திற்குள் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் மாநில தலைவர் கே .எஸ் .அழகிரி மூலம் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் வடக்கு வட்டார பொருளாளர் முருகன், தெற்கு வட்டார பொருளாளர் மாரியப்பன், வட்டார மகளிரணி தலைவி சீதாலட்சுமி, மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜாராம், துணைத் தலைவர் கஜ ராஜா, துணைச் செயலாளர் தங்கப் பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று நகரமன்ற தலைவர் கூறினார்.
- டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது . நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் , நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் , நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெண்கல உருவ சிலை சொந்த செலவில் அமைப்பதற்கு அரசு அனுமதிகோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் . கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
ஆனந்தராஜ் ( சுயே ):-நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலையுடன் , டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பன்னீர்செல்வம் (1 -வது வார்டு) விஸ்வநாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்:- இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார் . இக்பால் ( ம.ம.க ):- எங்கள் 8 - வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் , கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் . முத்தமிழன் ( தி.மு.க ):- ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் எங்கள் சரவண புரம் பகுதியில் வருவதற்கு சிரமமாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சத்யா ( சுயே ):- ராமு வீதியில் சாலை பணி தொடங்கி முடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புனிதவதி ( அ.தி.மு.க ):- நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 9 , 10 , 11 ஆகிய வார்டுகளில் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாருக் உசேன் ( சுயே ) - நெல்லிக்குப்பம் நகராட்சியில் துப்புரவு பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மலையான் ( அ.தி.மு.க ) எங்களது 12 - வது வார்டில் சமுதாய கழிப்பறை சீர்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர் . இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் , பொறியாளர் பாண்டு , இளநிலை உதவியாளர் பாபு மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் . முன்னதாக நகராட்சி மேலாளர் அண்ணாதுரை , துப்புரவு பணி மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .
உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவாஸ்தி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.
‘‘ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #RamStatue #UP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்