search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் காமராஜருக்கு ரூ.30 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலை- காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு
    X

    கடையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற காட்சி.




    கடையத்தில் காமராஜருக்கு ரூ.30 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலை- காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு

    • கடையத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்
    • கூட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார்.

    கடையம் வடக்கு வட்டார தலைவர் அழகு துரை, தெற்கு வட்டார தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் ராகுல் காந்தி பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடவும் சுமார் ரூ.30 லட்சம் செலவில் 8½ அடியில் பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ வெண்கலச் சிலை கடையம் மெயின் ரோட்டில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் விரைவில் நிர்வாகிகள் கூடி சிலை அமைப்பு கமிட்டி உருவாக்கி, ஒருவருடத்திற்குள் மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் மாநில தலைவர் கே .எஸ் .அழகிரி மூலம் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் வடக்கு வட்டார பொருளாளர் முருகன், தெற்கு வட்டார பொருளாளர் மாரியப்பன், வட்டார மகளிரணி தலைவி சீதாலட்சுமி, மாவட்ட மனித உரிமை தலைவர் ராஜாராம், துணைத் தலைவர் கஜ ராஜா, துணைச் செயலாளர் தங்கப் பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×