search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brothers of Italy"

    • இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி அமர்ந்திருக்கும் இடத்துக்கு நடந்து சென்று அவரது முகத்தில் இத்தாலியக் கொடியை வீசினார்.

    ஜி7  மாநாடு இன்று [ஜூன் 14] இத்தாலியில் வைத்து நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இத்தாலி பாராளுமன்றத்தில் எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    நேற்று முன் தினம் [ஜூன் 12] இத்தாலி பாராளுன்ற கீழ் சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ஆளும் வலதுசாரி கூட்டமைப்பு கொண்டுவந்த இந்த மசோதாவை எதிர்கட்சியான 5 ஸ்டார் இயக்கம் கடுமையாக எதிர்த்தது.

    மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் 5 ஸ்டார் இயக்க எம்.பி லியோனார்டோ டோனோ, பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் ராபர்டோ கால்டெரோலி அமர்ந்திருக்கும் இடத்துக்கு நடந்து சென்று அவரது முகத்தில் இத்தாலியக் கொடியை வீசினார்.

    இதனால் ஆளும் வலதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் லீக் மற்றும் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சிப் பிரதிநிதிகள் டோனோவிடம் விரைந்து சென்று அவரை பிடித்து இழுத்தனர். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் இருந்து டோனோவை காப்பற்ற காவலர்கள் படாதபாடு  பட்டனர்.

    இதனையடுத்து காயமடைந்த டோனோ அவையில் இருந்து வீல் சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து டோனோ ஊடகங்களுக்கு கூறுகையில், என்னை அவர்கள் பல முறை உதைத்தனர். எனது மார்பில் வலுவாக ஒரு உதை விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது என தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை அடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. விரைவில் அதன் மீது மறு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்பு தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
    • ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி

    மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.

    சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.

    அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:

    நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு மெலோனி கூறினார்.

    கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×