என் மலர்
நீங்கள் தேடியது "bus traffic"
- புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன.
- மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
தாமிரபரணியில் வரும் நீர்வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால் நெல்லை சந்திப்பில் உள்ள பஸ் நிலைய பகுதியில் நீர் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் வாகனங்கள் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை.
டவுன் ஸ்ரீபுரம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் பகுதிகளில் நீர் முற்றிலுமாக வடிந்து, இருசக்கர வாகனங்கள் செல்கின்றன. சில பகுதிகளில் தேநீர் மற்றும் மற்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கோவிலை சுற்றியுள்ள வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதியில் சாலையில் நீர் வடிந்துள்ளது. தெற்கு ரத வீதியில் மட்டும் சிறிதளவு நீர் உள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. சேரன்மகாதேவி சங்கன்திரடு, முக்கூடல், பொட்டல்புதூர் வழியாக கடையம் செல்கின்றன.
பாபநாசம் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்கள் வழக்கமாக செல்லும் வழித்தடமான சேரன்மகா தேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் வழியாக பாபநாசம் செல்கின்றன.
நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் , சேரன்மகா தேவி போன்ற பகுதிகளுக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தின் எதிரே உள்ள எஸ்.டி.சி. காலேஜ் ரோட்டில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. வாகனங்கள் சென்று வருகின்றன.
புதிய பஸ் நிலையம் பின்னே உள்ள சேவியர் காலனியில் நீர் முற்றிலுமாக வடிந்துள்ளது. நெல்லை சந்திப்பு செல்லும் பஸ்கள் வழக்கமான வழிதடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
மழை பெய்யாத காரணத்தினால் பாளையங்கோட்டை கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில பகுதிகளில் மட்டும் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.
வழக்கம்போல நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், திருப்பூர் செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென்காசிக்கு இன்னும் பஸ் சேவை தொடங்கப்படவில்லை.