search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business target"

    • திருப்பூரில் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷனில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி மற்றும் அரசு மானிய உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில், நாடுமுழுவதும், குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு கடனுதவி மற்றும் அரசு மானிய உதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் திருப்பூரில் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள ஆடிட்டர் அசோசியேஷனில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆடிட்டர் அசோசியேஷன் திருப்பூர் கிளை தலைவர் வரதராஜன், செயலாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.

    இதில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், 1984 பஞ்சப்படி பிரச்சினை எழுந்தபோதே, பின்னலாடை தொழில் இனி தாக்குப்பிடிக்காது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் இன்று அடுத்தடுத்து பல சோதனைகளை கடந்து தொழில் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.வங்கிகள், தொழில் முனைவோருக்கு தொடர்ந்து கடனுதவி வழங்கி, பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்க வேண்டும் என்றார்.

    மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை ஒரு லட்சம் கோடி என்கிற வர்த்தக இலக்கை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது. மாநகர உள்கட்டமைப்பு மேம் பாட்டுக்கு தொழில்துறையினர் கைகொடுக்கவேண்டும்.சாயக்கழிவுநீர் பிரச்சினை உட்பட எத்தனையோ சோதனைகளை கடந்துதான் இன்று சாதித்து கொண்டிருக்கிறது. தேவையான கடனுதவிகளை வழங்கி வங்கிகளும், ஆலோசனைகளை வழங்கி ஆடிட்டர்களும் தொழில் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளனர். நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தலைநகராக திருப்பூர் உயர்ந்துள்ளது. பிற நாடுகளுடனான போட்டியை எதிர்கொண்டு திருப்பூர் பின்னலாடை துறை வர்த்தக இலக்கை விரைவில் எட்டிப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×