search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CA"

    • சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர்.
    • 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

     திருப்பூர் : 

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தென்னிந்திய குழுவின் சார்பில் சி.ஏ, படிப்புக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் எஸ்.செந்தில்பிரபு, மனோகரன், ரூபிணி, மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஜெ.சுமதி வரவேற்று பேசினார். செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் சிறப்புரையாற்றினார். சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர். முடிவில் துைண முதல்வர் விஜயா வாழ்த்தி பேசினார்.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த டேவிட் பீவெர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். #CA
    ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடும்போது கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர். ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்தாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு ஓராண்டு தடைவித்தது.

    ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலுயுறுத்தப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்தது.



    ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியதிற்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது டேவிட் பீவெர் 2-வது முறையாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ×