என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cabinet approves"
- சர்வதேச சந்தையில் விலை உயர்வால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு.
- வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் உறுதி செய்ய நடவடிக்கை.
கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு இந்த விலை உயர்வு இந்திய வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தப்படவில்லை. இந்த காலத்தில் 72 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு
ரூ.22,000 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கோரிக்கையை அடுத்து, இந்த ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்வது மற்றும் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர்வது ஆகியவற்றிற்காக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 27-வது சர்வதேச அஞ்சல் சங்க மாநாட்டில் 11-வது கூடுதல் நடைமுறை கையெழுத்தானது.
- சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளை அமல்படுத்த நடவடிக்கை.
ஐவரி கோஸ்ட் நாட்டின் அபித்ஜான் நகரில் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் சங்கத்தின் 27-வது மாநாட்டில் சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சட்டவிதிகளின் 11-வது கூடுதல் நடைமுறை கையெழுத்தானது.
இதன்படி சர்வதேச அஞ்சல் சங்கத்தின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்புதல் மூலம் இந்திய அஞ்சல் துறை, குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்ட ஒப்புதல் ஆணை பெறுவதுடன், அதனை சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் தலைமை இயக்குனரிடம் ஒப்படைக்கும். இது சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறை 25 மற்றும் 30 அமல்படுத்த உதவும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.1.64 லட்சம் கோடி மதிப்பீட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
- கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வசதி வழங்க நடவடிக்கை.
தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 1.64 லட்சம் கோடி மதிப்பில் பிஎஸ்என்எல்-ன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன் மூலம் புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்பு பணிகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படும்.
மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்கும் வகையில் ரூ.26,316 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்படுகிறது.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இப்போட்டி நடத்துவதற்காக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 11-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் 13 மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவினம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.3 ஆயிரத்து 639 கோடியே 32 லட்சம் செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆன்லைன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் அடுத்த தலைமுறை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இன்போசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.4 ஆயிரத்து 242 கோடிக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய மந்திரி பியுஷ் கோயல் கூறுகையில், “இந்த திட்டத்தால், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்வதற்கான கால அளவு 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறையும். ஒரே நாளில் கணக்குகள் ஆய்வு செய்து முடிக்கப்படும். இதனால், திரும்ப பெறும் தொகையையும் விரைவில் பெற முடியும். 18 மாதத்துக்கு பிறகு திட்டம் அமலுக்கு வரும்” என்றார்.
பொதுத்துறையை சேர்ந்த எக்சிம் வங்கிக்கு ரூ.6 ஆயிரம் கோடி மூலதனமாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.
ரெயில்வே துறையில் பணியாற்றும் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.2000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 198 அணைகளை பாதுகாத்து பராமரிப்பதற்கு ஒரு திட்டத்தை உலக வங்கி உதவியுடன் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,466 கோடி செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு நேற்று தனது ஒப்புதலை வழங்கியது.
இதில் ரூ.2,628 கோடியை உலக வங்கி வழங்கும். ரூ.747 கோடியை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தரும். எஞ்சிய ரூ.91 கோடியை மத்திய நீர் ஆணையம் அளிக்கும்.
இதில் தமிழக அணைகள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.543 கோடி ஆகும்.
அங்கன்வாடி ஊழியர்கள் மாத சம்பளத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுகிற ஊழியர்கள் சம்பளம் ரூ.2 ஆயிரத்து 250-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், அங்கன்வாடி உதவியாளர் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 250 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும் மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.250-ம் வழங்கப்படும். இதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
நமது நாட்டில் அஞ்சல் துறையும் வங்கித்துறையில் கால் பதிக்கிறது. அந்த வகையில், அஞ்சல் துறை சார்பில் ‘ஐ.பி.பி.பி.’ என்ற பெயரில் இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி தொடங்கப் படுகிறது. இந்த வங்கியை 1-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கியை தொடங்குவதற்காக ரூ.800 கோடி நிதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இப்போது இந்த வங்கி தொடங்குவதற்கான செலவு, திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1,435 கோடி ஆகும். எனவே இந்த வங்கிக்காக மேலும் ரூ.635 கோடி நிதி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.
இந்த தகவலை தகவல் தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா, நிருபர்களிடம் தெரிவித்தார். #PostPaymentBank
விலைவாசி உயர்ந்துவிட்டதால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பென்சன்தாரர்களுக்கும் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு ஒரு வருடத்திற்கு 6112 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். பென்சன்தாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி கொடுப்பதால் வருடத்திற்கு 4074 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #DAHike #UnionCabinet
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி நிதி நிறுவனம் (எச்.இ.எப்.ஏ.) இன்னும் 4 ஆண்டுகளில் (2022-ம் ஆண்டுக்குள்) ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டிக்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதேபோன்று உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.
ஏற்கனவே ரூ.1,000 கோடி வழங்கி உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நிறுவனத்துக்கு கூடுதலாக அரசு தரப்பு பங்காக ரூ.5 ஆயிரம் கோடி வழங்குவதற்கும் இந்தக் குழு தனது ஒப்புதலை வழங்கியது.
உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தும் மத்திய மந்திரிசபையின் முடிவால், தொழில் கல்வி நிறுவனங்கள் நிதி பெற வழி பிறந்து உள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள், பிற சுகாதார கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உயர் கல்வி நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி வசதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்:-
* இணையதளம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிற சூழலில், சர்வதேச காப்புரிமை அமைப்பின்கீழ் அறிவுசார் படைப்பாளர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற ஏதுவாக உலக அறிவுசார் சொத்துக்கள் அமைப்பின் அறிவுசார் பதிப்புரிமை ஒப்பந்தத்தில் இணைவதற்கு மத்திய மந்திரி ஒப்புதல் வழங்கியது.
* மரபணு தொழில் நுட்ப ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது.
* நலிவுற்ற நிலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுக்கான நிதியை ரூ.200 கோடியில் இருந்து ரூ.336 கோடியே 24 லட்சமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
* சட்டம், நீதித்துறையில் கூட்டு ஆலோசனை குழு அமைப்பதற்கு இந்தியாவும், இங்கிலாந்தும் புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்தது. #Research #HigherEducation #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்