search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canadian Grand Prix 2018"

    கனடா கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், இந்தாண்டுக்கான பார்முலா ஒன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #SebastianVettel #CanadianGrandPrix2018 #FormulaOne2018

    மோண்ட்ரியல்:

    2018-ம் ஆண்டுக்கான பார்முலா ஒன் கார் பந்தய போட்டிகள் உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. கனடா கிராண்ட் பிரிக்ஸ் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 

    இப்போட்டியில் பெராரி அணிக்காக களமிறங்கிய ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார். இது கனடாவில் அவர் முதலிடம் பிடிப்பது இரண்டாவது முறையாகும். முன்னதாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின்போது ரெட் புல் அணிக்காக பங்குபெற்ற அவர் முதலிடம் பிடித்தார். கனடாவில் பெராரி அணி 2006-ம் ஆண்டுக்கு பின் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். 

    இந்த வெற்றியின் மூலம் இந்தாண்டுக்கான பார்முலா ஒன் புள்ளிப்பட்டியலில், செபாஸ்டியன் வெட்டல் 121 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். இது இந்தாண்டில் அவரது மூன்றாவது வெற்றியாகும். முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் பஹ்ரைனில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளிலும் அவர் முதலிடம் பிடித்தார்.

    இந்த பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் பின் வால்ட்டேரி போட்டாஸ் இரண்டாவது இடத்தையும், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெஸ்டப்பென் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 



    பார்முலா ஒன் பந்தயங்களில் 7 சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் செபாஸ்டியன் வெட்டல் 121 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லெவிஸ் ஹாமில்டன் 120 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வால்ட்டேரி போட்டாஸ் 86 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். #SebastianVettel #CanadianGrandPrix2018 #FormulaOne2018
    ×