search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannes"

    • இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு ‘தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.
    • இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும்.

    2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்து இந்திய குறும் படங்களுக்கும், திரைப்படங்களுக்கும், நடிகருக்கும் அங்கீகாரம் கிடைத்த நிலையில் தற்பொழுது இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு 'தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி' என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.

    இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும். சந்தோஷ் சிவன் அவருக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை வியந்தும், புதுமையாக ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிறதோ. அதுப்போல தான் சந்தோஷ் சிவனின் காட்சிபதிவு இருக்கும்.

    இவரின் இந்த காட்சிபதிவு திறனுக்கு இவரின் அப்பா மிக முக்கிய காரணம். இவரது தந்தையான  சிவசங்கரன் நாயர் பிரபலமான மலையாள இயக்குனர் ஆவார். இவர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை சொந்தமாக வைத்து இருந்தார். சிறு வயதில் இருந்தே தன் அப்பாவுடன் போட்டோ ஸ்டூடியோக்கு செல்வதும், அவர் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு உதவி செய்து வந்து, ஒளிப்பதிவின் மீது ஆர்வம் பற்றிக் கொண்டது.

    1986 ஆம் ஆண்டு வெளியான `நிதியுடே கதா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது ஒளிப்பதிவாளர் பயணத்தை தொடங்கினார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவின் திறமை அபாரமாக இருக்கும்.

    ரோஜா படத்தில் வரும் இயற்கை காட்சிகள், தளபதி படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்திற்கும் சூரியனுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கும், அதை மிக அழகாக காட்சி படுத்திருப்பார். இவர் ஒளிப்பதிவில் உருவான சாருக்கான் ஓடும் ரெயிலில் ஆடிய 'சையா சையா' பாடல் இன்று வரை மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

     

    இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் என்ற சங்கத்தை தொடங்கி வைத்தது சந்தோஷ் சிவன் ஆகும்.அமேரிகன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் பெருமை இவரே சேறும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் 50-மேற்பட்ட டாக்குமண்டரிகளுக்கும் ஒளிப்பதிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

    சர்வதேச அளவில் இதுவரை பல பிரபல ஒளிப்பதிவாளர் பெற்ற இந்த கேன்ஸ் கவுரவ விருதை நம் இந்தியாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தற்பொழுது பெற்றுள்ளது மிகப் பெரிய ஒரு அங்கீகாரம் இந்திய சினிமா பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது.
    • இந்திய குறும்படமான ’ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது. இந்திய குறும்படமான 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 40 வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் இடம் பெறும் இந்திய திரைப்படமாகும். பாயல் கபாடியாவின் இயகத்தில் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் இப்படம் உருவாகியுள்ளது.

    விழாவின் முதன்மை போட்டி பிரிவில் கேன்ஸ் பாம் டி ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் என சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிரண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.இப்படத்திற்கு விழாவில் 8 நிமிடம் படம் பார்த்து முடித்த பின் எழந்து நின்று கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    • இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன.

    பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தை இந்திய குறும்படங்கள் பிடித்திருப்பது ரசிகர்களை குதூகலமடையச் செய்திருக்கிறது.

    இயக்குனர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சன்பிளவர்ஸ்'. 16 நிமிடங்கள் ஓடக்கூடிய புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்களின் தயாரிப்பில் உருவான குறும்படம் இது.

    77-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறந்த குறும்படத்திற்கான லா சினிஃப் பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படப் பள்ளியின் ஒரே திரைப்படமாக இது உள்ளது. திரையிடல் முடிந்த பிறகு 'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் பரிசு பெற்ற 'சன்பிளவர்ஸ்' படக்குழுவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய திறமை எல்லைத்தாண்டி பிரதிபலிக்கிறது... கேன்ஸ் 2024 இல் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் விருதை சிதானந்தஸ்நாயக்கின் 'சன்பிளவர்ஸ்' வென்றுள்ளது என்பதைக் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி! இளைஞர்களுக்கு பாராட்டுகள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷேம்லெஸ் படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் அனசுயா சென்குப்தா நடித்துள்ளார்.
    • டெல்லியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் பாலியல் தொழிலாளி பயணத்தை இப்படம் சித்தரிக்கிறது.

    கேன்ஸ் பட விழா நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    இந்த படவிழாவில் இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா சிறந்த நடிகைக்காக விருதை வென்றுள்ளார். கேன்ஸ் பட விழாவில் Un Certain Regard பிரிவுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. ஷேம்லெஸ் (Shameless) படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    இந்த விருதை வாங்கும் முதல் இந்திய நடிகை இவர் ஆவார். இந்த படத்தை பல்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் கான்ஸ்டன்டைன் போஜனாவ் இயக்கியுள்ளார். டெல்லி விபச்சார விடுதியில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடும் பாலியல் தொழிலாளியின் பயணத்தை  சித்தரிப்பதாக இப்படம் அமைந்துள்ளது.

    • பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம்,
    • இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

    இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாரூன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் கிராஷ் கோர்ஸிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுகளைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

    இரு செவிலியர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு டிரிப் செல்கின்றனர். அதில் அவர்கள் பார்க்கக் கூடிய மனிதர்கள், வாழ்க்கை என படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஷாஜி கருண் இயக்கிய மலையாள படமான ஸ்வஹம் திரைப்படம் தான் இந்தியாவிலேயே இதற்கு முன் இப்பிரிவில் போட்டியிட்டப் படம். அதற்கு அடுத்து "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பாலியல் வன்முறையை எதிர்த்து பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் படவிழாவில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூண்டுக்குள் தன்னை பூட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். #MallikaSherawat
    பாலியல் குற்றங்கள் உலகளாவில் அதிகரித்துள்ளன. ஹாலிவுட் படங்களிலும் இந்திய திரையுலகிலும் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து துன்புறுத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. குழந்தைகளும் இந்த கொடுமைகளில் சிக்குகிறார்கள். பாலியல் வன்மங்களுக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்யும் பாதகங்களும் நடக்கின்றன.

    இதற்கு எதிரான குரல் தற்போது ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ளது. ஹாலிவுட் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் ‘மீடூ’ இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டியின் போராட்டத்துக்கு பிறகு திரையுலக பெண்களை பாதுகாக்க புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பிரான்சில் நடந்த கேன்ஸ் பட விழாவில் பூட்டப்பட்ட கூண்டுக்குள் இருந்தபடி நூதன போராட்டம் நடத்தினார்.

    ‘12 மணிநேரமாக நான் சிறை வைக்கப்பட்டு உள்ளேன். பெண்ணை சுதந்திரமாக வாழ விடுங்கள்’ என்று கோஷம் எழுப்பியபடி இந்த போராட்டத்தை நடத்தினார். இது பட விழாவுக்கு வந்த அனைவரையும் கவர்ந்தது. #MallikaSherawat

    ×