search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car bomb"

    • வாகனத்தின் மீது யாரோ மர்மநபர்கள் குண்டுகளை வீசினர்.
    • போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டுகள் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாவோடு அருகே உள்ள சக்கரக்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தொடர்பாக மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இருந்தபோதிலும் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் மீது யாரோ மர்மநபர்கள் குண்டுகளை வீசினர்.

    ஆனால் போலீஸ் வாகனத்துக்கு அருகில் விழுந்து குண்டுகள் வெடித்தன. இதுகுறித்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் சோதனை செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருட்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    அப்போது போலீஸ் வாகனம் மீது வீசப்பட்டது ஐஸ்கிரீம் குண்டுகள் என்பது தெரியவந்தது. போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டுகள் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார்.

    உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன.

    இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

    இதற்கிடையே, இந்த போரில் பல்வேறு முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, போரில் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்து தெரிவித்த நபர்களையும் மர்மான முறையில் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், ரஷிய ஆதரவு எழுத்தாளர் சகர் பெர்லிபினை குறிவைத்து கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷிய ஆதரவு எழுத்தாளர் பெர்லிபின் நேற்று மாஸ்கோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் நிஸ்னி நவ்கொரொட் நகரில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, அந்த கார் திடீரென வெடித்து சிதறியது. காரில் வெடிகுண்டு பொறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் குண்டுவெடிப்பில் கார் டிரைவர் உயிரிழந்தார்.

    எழுத்தாளர் பெர்லிபின் படுகாயமடைந்தார். அவரை மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், எழுத்தாளரை கொல்ல முயன்ற கார் வெடிகுண்டு சம்பவபத்திற்கு உக்ரைனையும் அமெரிக்காவையும் ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏமன் நாட்டின் தெற்கு பகுதி நகரமான ஏடன் நகரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை மோத செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் 4 பொதுமக்கள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை. ஏடன் நகரில் அடிக்கடி அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிரியாவில் நிகழ்ந்த கார்குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிர் இழந்தனர். #Syria #CarBomb
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது.

    மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்களில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  #Syria #CarBomb 
    கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். #CarBombAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் உள்ளது அல் பெய்ரா நகரம். இங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அமெரிக்க கூட்டு படைவீரர்கள் 11 பேர் மற்றும் 3 குழந்தைகள் உள்பட 7 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர் என சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். #CarBombAttack
    ஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி பலியாகினர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் லாகர் மாகாணத்தில் நேற்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தபர்.

    விசாரணையில், நாட்டோ படைகள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஆப்கானிஸ்தானில் நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத் என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சீக்கியர்கள் உள்பட 19 பேர் பரிதாபமாக பலியானது குற்ப்பிடத்தக்கது.
    ×