search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car dealers"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது.
    • ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக கார் விற்பனை அதிக அளவில் நடந்து வந்த நிலையில் இந்த மே மாதம் கார் விற்பனை மந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் கடந்த காலங்களில் அதிக லாபம் ஈட்டி வந்த கார் டீலர்கள், தற்போது சுமார் 4.5 லட்சம் யூனிட் அளவிலான உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் உற்பத்தியாளர்களிடமே தேங்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 3.5 லட்சம் யூனிட் கார்கள் விற்பனையாகும் அளவிற்கு கார் விற்பனை சந்தை வளர்ந்துள்ள போதிலும் ஒரு லட்சம் யூனிட்கள் கூட தற்போது விற்பனை செய்யப்படாமல் தேங்கியிருப்பது வழக்கத்துக்கு மாறாக பார்க்கப்படுகிறது.

     

    ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விங்கேஷ் குலாட்டி இதுகுறித்து பேசுகையில், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தாயாராக இருக்கும் கார்கள் 4 லட்சம் யூனிட் அளவிற்கு விற்பனைக்கு செல்வது ஆரோக்கியமான சந்தையை உருவாக்கும்.

     

    ஆனால் தற்போது 1 லட்சம் யூனிட் அளவு கூட விற்பானையாகாமல் தேங்கி நிற்கிறது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கார் யூனிட்களை கூடுதலாக பல மாதங்களாக இருப்பில் வைத்திருக்கும் செலவு அதிகரிப்பது கார் வாங்குபவர்களுக்கு டீலர்களுக்கும் நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இந்த அசாதாரண நிலையை சரி செய்ய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்துக்கொள்வதே தீர்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • வாகன வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா அவிநாசியில் நடைபெற்றது.
    • குறைந்த வாடகையில் வாகனச் சந்தை அமைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு காா் வியாபாரிகள் மற்றும் ஆலோசகா்கள் திருப்பூா் நல மாநில கூட்டமைப்பு, திருப்பூா் வடக்கு மாவட்ட வாகன வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா அவிநாசியில் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வாடகையில் வாகனச் சந்தை அமைக்க வேண்டும். இணைய வழி வாகன விற்பனையைத் தடை செய்ய வேண்டும். வாகன வியாபாரிகளை நல வாரியத்தில் இணைக்க வேண்டும்.

    வியாபாரிகளின் நலன் கருதி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் தடைச்சான்று உள்ளிட்டவை பெற காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×