என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car showroom"

    • டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் கடந்த மே 7 ஆம் தேதி ரவுடி கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர். கார் ஷோரூம் முற்றிலுமாக சேதமடைந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் ஹிமான்சு பாகு என்ற ரவுடியின் கும்பலைச் சேர்த்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் தங்களின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி ததுப்பாகிச்சூடு நடத்திய ஷோரூமில் பகிரங்கமாக விட்டுச் சென்றுள்ளனர்.

    இதனையடுத்து குற்றவாளிகளை டெல்லி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த அஜய் சிங்கோரா என்ற முக்கிய ரவுடி, டெல்லி புறநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று (மே 16) மாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் அஜய் சிங்கோராவை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மற்றொரு கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்த நிலையில் இந்த என்கவுன்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ரவுடி கும்பலின் தலைவன் ஹிமான்சு பாகுவை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியை பயமுறுத்தி வந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை போலீசார் என்கவுன்டர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதிய காரை ஓட்டி வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தார்.
    • கண்ணாடி கதவு, மேஜை உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கி சிதறும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

    கார் வாங்கி அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர், விற்பனை நிலைய கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு வந்து காரை நிறுத்தும் வீடியோ இணையத்தில் பரவுகிறது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஒரு கார் விற்பனை நிலையத்தில் மைக்கேல் முர்ரே (வயது35) என்பவர் புதிய காரை பதிவு செய்து வாங்கினார்.

    காரை ஓட்டிச் சென்ற சிறிது நேரத்தில் அவர் திரும்ப வந்தார். 'கார் திருப்தியில்லை, காரை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று விற்பனை நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால் 'விற்பனை செய்த காரை திரும்பப் பெறுவதில்லை' என்று அதிகாரிகள் பதிலளித்தனர்.

    இதனால் மைக்கேல் ஆத்திரம் அடைந்தார். 'காரை ஷோரூம் கதவை உடைத்துக் கொண்டு ஓட்டுவேன்' என்று ஆவேசமாக கூறினார். அதற்கு கார் நிறுவனத்தினர் 'மிரட்டல் வேண்டாம்' என்று அனுப்பினர். அவசரமாக வெளியே சென்ற மைக்கேல் தான் சொன்னபடியே புதிய காரை ஓட்டி வந்து விற்பனை நிலையத்தின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தார். கண்ணாடி கதவு, மேஜை உள்ளிட்ட பொருட்கள் நொறுங்கி சிதறும் வீடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. ஒரு கோடியே 75 லட்சம் பேர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர். இது தொடர்பாக மைக்கேல் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.



    ×