என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cargo vehicle"
- சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் பைடாகி பகுதியில் இன்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை அதிகாலை புனே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு டிரக் வாகனம் மீது பயணிகள் சென்ற மினி பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் சாவாடத்தி பகுதியில் உள்ள எல்லம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது சொந்த ஊரான சிவமோகாவிற்கு பக்தர்கள் மினி பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் பஸ் ஓட்டும்போது டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
- யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம்-கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது.
அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக கரும்புக்கட்டுகள், காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலை நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.
இதையடுத்து வாகனங்களை வழிமறைத்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள், உணவு ஏதாவது உள்ளதா? என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி அலைந்தது.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் இருந்த பயணிகள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
- சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.
இங்கு சாம்ராஜ்நகர், தாளவாடி, ஆசனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் உரு ளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் ஏராளமான மினி ஆட்டோக்களில் தினமும் ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.
நேற்று இரவு தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
அப்போது சாலையின் ஓரமாக யானையை தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுனர் வாகனத்தை இயக்கிய போது, காட்டு யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது.
பின்பு உருளைகிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்தி ற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து மீண்டும் சீரானது.
- கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.
- மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் சுய உதவி குழுக்கள், மாற்றத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 கோடி 32 லட்சம் கடன் வழங்கினார். நபார்டு நிதி உதவி கீழ் வழி சோதனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ. 6.50 லட்ச மதிப்பில் சரக்கு வாகனம் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதியதாக துவக்கப்பட உள்ள வண்டிப்பாளையம் கிளையினை ஆய்வு செய்தார். மேலும் கடலூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அலுவலர் எழில்பாரதி மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 37). முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டி பாளையத்திற்கு சென்றார் . அங்கு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த காத்தவராயனை ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
- சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.
திருவாடானை
ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது45). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் ராமநாத புரத்தில் இருந்து திருவாடா னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சி.கே.மங்கலத்திலிருந்து ஆர்.எஸ். மங்கலம் சவேரியார் பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவா டானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ப வரை கைது செய்தனர்.
- நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் மகன் கண் முன்பு தந்தை பலியானார்.
- அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.
சிங்கம்புணரி
மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது45). இவரது மகன் ரியாஸ் (17). இருவரும் சந்தையில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைகளில் இருவரும் சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது வழக்கம். காரைக்குடியில் நடந்த சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள காளாப்பூரில் விறகு ஏற்றிய லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு சாகுல் அமீது மகனுடன் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சரக்கு வானத்தை ரியாஸ் ஓட்டினார். அதி வேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாகுல் அமீது இறந்தார். தனது கண் முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் செய்வதறியாமல் தப்பினார். தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் தலைமறைவான ரியாசை தேடி வருகின்றனர். ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகுதி இல்லாத வயதில் சரக்கு வாகனத்தை ஓட்டி தந்தையை காவு வாங்கிய ரியாஸ் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்