என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Carlos Alcaraz"
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது லீக் போட்டியில் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 8-வது நிலை வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் சின்னர் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
- ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் நடைபெறுகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அலகாரஸ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பெல்கிரேட்:
ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டி 17-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் ஒற்றையரில் தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள வீரர்களும், இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடியினரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டியில் 3ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 6-வது நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 1-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் நம்பர் 2 வீரரும் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரரான யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.
இதில் ஹம்பர்ட் 6-1, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்த தோல்வியின் மூலம் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலி வீரர் சின்னருடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு காலிறுதியில் நம்பர் 3 வீரரான ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்காரஸ், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-7 (5-7), 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என இழந்த சின்னர், அதிரடியாக விளையாடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் வு யீபிங்குடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-5), 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் நம்பர் 2 வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.
இதில் சின்னர் முதல் செட்டை 7-6 (8-6) என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-3) என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- அல்காரஸ் மற்றும் வான் டி சாண்ட்சுல்ப் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்.
- இதில் முதல் செட்டை (6-1) என்ற கணக்கில் எளிதாக வான் டி சாண்ட்சுல்ப் கைப்பற்றினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
தர வரிசையில் 74-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்தின் வான்டி சான்ட்ஸ்சுல்பிடம் 6-1, 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் அல்காரஸ் தோற்று வெளியேறினார்.
4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள முன்னணி வீரரான அல்காரஸ், 2022-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபனில் அரை இறுதியில் தோற்று இருந்தார். இந்த ஆண்டு 2-வது சுற்றிலேயே நடையை கட்டினார்.
மற்றொரு 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் மெட்வதேவ்-ஹங்கேரியின் மரோசன் ஆகியோர் மோதினர்.
இதில் மெட்வதேவ் 6-3, 6-2, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல் டாமிபால் (அமெரிக்கா), டான் எவர்ஸ் (இங்கிலாந்து), மென்ஷிக் (செக் குடியரசு) ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மெக்சிகோவின் ஜராசுவாலை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் ரைபகினா காயம் காரணமாக 2-வது சுற்றில் இருந்து விலகினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போண்ணா-எப்டன் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-3, 7-5 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராபின் ஹாஸ்-சாண்டர் அரேண்ட்ஸ் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
- அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-4, 6-7 (5-7), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச் வென்றார்.
- ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
- முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-3-7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானனிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.
முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார். இதனால் 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) அரையிறுதி வாய்ப்பை பெற்றார்.
அவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார். இன்று இரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெத்வதேவ் செக் வீரர் ஜிரி லெஹ்காவை சந்திக்கிறார்.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜேன் லெனார்டுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் முதல் செட்டையும், ஜேன் லெனார்ட் அடுத்த செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் வென்றார். இறுதியில், அல்காரஸ் 6-3, 6-7 (5-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் ரூப்லெவ், சின்னர் உள்ளிட்டோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்