என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cases Pending"
- மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
- உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆவர்.
உச்சநீதிமன்றத்தில் 80,000 வழக்குகள் உட்பட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 5,08,85,856 வழக்குகளில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் உள்ளன.
மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்திய நீதித்துறையின் ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 26,568 நீதிபதிகள். உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆகவும், உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலம் 1,114 ஆகவும் உள்ளது.
மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.