search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cattle slaughter"

    ராஜஸ்தான் மாநிலம் கோவிந்த்கார் பகுதியில் 40 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்ட சம்பவம் அறிந்த எதிர்ப்பாளர்கள் ஒன்று திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது.
    ஜெய்ப்பூர்:

    வடமாநிலங்கள் பலவற்றில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாட்டு இறைச்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் கடுமையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் மாட்டு இறைச்சி வைத்திருப்பவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபடுகிறார்கள்.

    சமீபத்தில் ஆல்வார் பகுதியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக ரக்பர்கான் என்பவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது. இதனால் ராஜஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கோவிந்த்கார் என்ற இடத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டது.

    ராஜஸ்தானில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாட்டை வெட்டிய ‌ஷகில் மற்றும் அவரது நண்பர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர்.

    மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்ட வி‌ஷயம் தெரிந்ததும் அதன் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. அவர்கள் ஊர்வலமாக வந்து எதிர்ப்பு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ×