என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cellphone flush"
- மதுரை அருகே கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிக்கப்பட்டது.
- நேற்று மதியம் டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றார்.
மதுரை
மதுரை முத்துப்பட்டி, மகாலட்சுமி நகரைச் சேர்ந்த முருகன் மகள் கமலவேணி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் நேற்று மதியம் டவுன்ஹால் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென கமலவேணி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து ஓடினார். உடனே மாணவி கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டு குற்றவாளியை பிடித்து திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி னார். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், மானா மதுரை, அன்பு நகரைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்பு க்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
நெற்குன்றம் சக்தி நகர் 18-வது தெருவைச் சேர்ந்தவர் மைக்கேல் ஜாக்சன் (வயது 22). கோயம்பேடு மார்கெட்டில் உள்ள கடையில் பணி புரிந்து வருகிறார்.
மைக்கேல் நள்ளிரவு 12.15 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் அருகே வந்த போது எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் மைக்கேலை வழி மறித்து பணம் கேட்டு மிரட்டினார்.
பணம் தர மறுத்த மைக்கேலின் பையில் இருந்து செல்போனை பறித்தான். இதை தடுத்த மைக்கேலை தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டினான். தலையில் 3 இடங்களில் வெட்டு காயமடைந்த மைக்கேல் ரத்தம் வழிந்தபடியே கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றார்.
ஆனால் கொள்ளையன் தனது பைக்கை அங்கேயே போட்டுவிட்டு செல்போனுடன் அங்கிருந்து தப்பி சென்றான்.
இதுகுறித்து மைக்கேல் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் தீபக்குமார் மற்றும் போலீசார் மைக்கேலை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொள்ளையன் விட்டு சென்ற பைக் எண்ணை வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது முகப்பேர் கிழக்கு பாடிபுதுநகர் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் (19) என்பது தெரிந்தது.
வானகரம் அருகே நரசிம்மனை போலீசார் கைது செய்தனர். நரசிம்மன் ஏற்கனவே கோயம்பேடு பஸ் நிலைய போலீசாரால் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் பாபு (வயது 36). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு காந்திபுரம் பஸ் நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் பாபுவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த பாபு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை பார்த்த அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் வாலிபர்களை விரட்டிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை கைபற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
பரமக்குடி:
பரமக்குடி வைகை ஆற்று கரையோரம் உள்ள இரண்டு சர்வீஸ் சாலைகளிலும் மாலை நேரங்களில் ஏராளமான ஆண்களும் பெண்களும் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளை எடுத்து பேசிக் கொண்டு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் அவர்களது தலையில் தாக்கி நிலை தடுமாறச் செய்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விலை உயர்ந்த மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய செல்போன்களையும் மர்ம நபர்கள் தட்டிப் பறித்து சென்றுள்ளனர். முக்கிய நபர்களின் செல்போன்களும் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செல்போனை பறி கொடுத்த முன்னாள் மாவட்ட பதிவாளர் சேகரன் உள்பட பலர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. மேலும் அசம்பாவிதம் எற்படும் முன் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்குன்றம் கிருஷ்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று இரவு மேட்டுக்குப்பம் கடும்பாடி அம்மன் கோவில் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து திணேஷ் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். தினேஷ் அளித்த மோட்டார் சைக்கிளின் அடையாளத்தை வைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோயம்பேடு விருகம்பாக்கம் சாலையில் பைக்கில் வந்த இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாசம், மதுரவாயலை சேர்ந்த மணிகண்டன் என்பதும் கோடம்பாக்கத்தில் ஒரு பெண்ணிடம் செல்போன் பறித்ததும் கோயம்பேட்டில் பானிபூரி வியாபாரியிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, 2செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
வத்தலக்குண்டுவை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜாபர்சாதிக். இவர் நேற்றுமாலை திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். ஸ்டேட்பாங்க் காலனி அருகே செல்போனில் பேசியபடி சென்றபோது பின்னால் வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாபர்சாதிக் அங்கிருந்த நண்பர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அவர்களை விரட்டினார். மேலும் வத்தலக்குண்டு போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை விரட்டி வந்தனர். பட்டிவீரன்பட்டி குறுக்கு ரோடு பகுதியில் கன்னிமார்கோவில் அருகே செல்போன் பறித்து சென்ற 2 பேரையும் மடக்கிபிடித்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர்கள் பெரும்பாறையை சேர்ந்த விஜய்(25), மணிமுத்து(21) என தெரியவரவே அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
புதுச்சேரி:
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார்சாகு (வயது20). இவர் சேதராப்பட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் சஞ்சய்குமார்சாகு பணிமுடித்து தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
செல்போனில் பேசியபடியே வந்த போது பின்னால் ஒரே மோட்டார் சைக்களில் வந்த 3 பேர் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி சஞ்சய்குமார்சாகுவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
செல்போனை பறிகொடுத்த சஞ்சய்குமார்சாகு சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து செல்போனை பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்