என் மலர்
நீங்கள் தேடியது "challenging"
பெங்களூர்:
பிரதமர் மோடி சமீபத்தில் தான் உடற்பயிற்சி, யோகாசனம் செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமிக்கு பிட்னஸ் சவால் விடுத்தார்.
அதற்கு குமாரசாமி, நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். எனது பிட்னசை விட கர்நாடகாவின் பிட்னஸ்தான் முக்கியம் என பதில் அளித்து இருந்தார். ஆனால் குமாரசாமி இது தொடர்பாக போட்டோ, வீடியோ எதுவும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு சவால்விடும் வகையில் 86 வயதான தேவேகவுடா, தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தேவேகவுடா பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஜிம் அமைத்து தினமும் உடற்பயிற்சி, யோகாசனம், நடைபயிற்சி செய்து வருகிறார்.
அவருக்கு கார்த்திக் என்ற பயிற்சியாளர் உடற்பயிற்சி பயிற்றுனராக இருந்து உதவி வருகிறார்.
இதுபற்றி தேவேகவுடா கூறுகையில், “எனக்கு வயதாகி விட்டதால் இயல்பாகவே சில பிரச்சினைகள் வந்து விட்டன. அதை உடற்பயிற்சியினால் சரி செய்து வருகிறேன். சைவ உணவையே சாப்பிடுகிறேன். மது, புகைபழக்கம் கிடையாது. நீண்ட நாள் வாழ எனக்கு ஆசை இல்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவே உடற்பயிற்சி செய்கிறேன்” என்றார்.
பயிற்சியாளர் கார்த்திக் கூறும்போது, “தேவேகவுடாவுக்கு 86 வயது. ஆனாலும், 40 வயதானவர்களுக்கு இணையாக ஆரோக்கியமாக உள்ளார்” என்றார். #devegowda #pmmodi