என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chandra Kumar Bose"
- நேதாஜி கருத்துக்களை மக்களிடம் கொண்டுசேர்க்க அனுமதிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
- மதம், சாதி மற்றும் பிரிவு என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேரன், சந்திர குமார் போஸ் பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். நேதாஜியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவகாரத்தில் கட்சி தலைமை மற்றும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைமை போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இது குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு சந்திர குமார் போஸ் எழுதிய கடிதத்தில், "பா.ஜ.க. கட்சியில் சேரும் போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சரத் சந்திர போஸ் ஆகியோரின் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க அனுமதிப்பதாக எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதுபோன்ற விஷயம் எதுவும் நடக்கவே இல்லை."
"அப்போது, பா.ஜ.க.-வுடன் நான் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில், போஸ் சகோதரர்களின் கருத்துக்களை பா.ஜ.க. மூலம் நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் வகையில் தான் இருந்து வந்தது. இதன் பிறகு, நேதாஜியின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ஆசாத் இந்து மோர்ச்சா பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதில் மதம், சாதி மற்றும் பிரிவு என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் பாரதியாக்களாக ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்பட்டது."
"இதுபோன்ற திட்டங்களுக்கு பா.ஜ.க.-விடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கப் பெறவில்லை. மத்திய மற்றும் மாநில அளவிலும் இந்த மகத்தான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நான் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் திட்டமிடல்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
2016-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தின் பா.ஜ.க. கட்சியின் துணை தலைவராக சந்திர குமார் போஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். பிறகு 2020 வாக்கில் இவரது பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இடையில் 2019 ஆண்டு சி.ஏ.ஏ.-வை கடுமையாக எதிர்த்த சந்திர குமார் போஸ் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்