என் மலர்
நீங்கள் தேடியது "Chandrababu Naidu"
- 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது.
- அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம்.
சென்னை ஐஐடி-யில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளைப் பார்த்தால், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக உயர்ந்த வளர்ச்சியை காட்டியுள்ளது.
பொருளாதாரத்தில் தற்போது முதல் நான்கு இடத்தில் இருக்கும் நாடுகளில் மூன்று நாடுகள் நல்ல மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன. 2014-ல், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. 2021-ல், நாம் ஐந்தாவது இடத்தில் இருந்தோம்.
அடுத்த ஆண்டு 2026-ல், நாம் நான்காவது இடத்தில் இருப்போம். 2028-ல் நாம் மூன்றாவது இடத்தில் இருப்போம். நாம் அனைவரும் கடினமாக உழைத்தால், 2047-ல் இந்தியா 1 அல்லது 2-வது நாடாக மாறும். நமது சுதந்திரம் அடைந்து 100ஆவது ஆண்டில் இது நடக்கும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
- சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
- முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மாநில அரசு ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
பணக்காரர்கள், ஏழைகளுக்கு உதவுவது குர்ஆன் கற்றுக்கொடுத்த ஒரு நல்ல பண்பு. சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் கீழ் ஐக்கிய மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது.
சிறுபான்மை நிதிக் குழுவை முதன்முறையாக அமைத்தது என்.டி.ஆர், மாநிலத்தில் உருது மொழியை 2-வது மொழியாக அமல்படுத்தினேன்.
முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது, ஐதராபாத்தில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, கர்னூலில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சி முதன்முறையாக இமாம்களுக்கு கவுரவ ஊதியத்தை அமல்படுத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
- அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.
திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
திருப்பதி கோவிலில் இன்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருமலை கோவிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது வேலை செய்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்.

பக்தர்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் இறைவனைக் காணும் வாய்ப்பைப் பெறும் வகையில், அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்களைக் கட்டுவோம்.
திருமலையின் புனித மலைகளைச் சுற்றி எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. இங்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

- 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
- பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திராவின் சதாம் உசேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
ருஷிகொண்டா மலைகளில் உள்ள ஜெகன் மோகனின் ஆடம்பர மாளிகை குறித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷ், "ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்தார்.
என் தாத்தா முதல்வராக இருந்தார், என் அப்பா முதல்வராக இருந்தார், ஆனால் இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. அவரது சகோதரி மற்றும் தாயார் ஜெகன் மோகன் குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 4 பேர் ஒரு வீட்டில் வசிக்க, 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை
அரண்மனை போன்ற இந்த வீட்டை என்ன செய்வது என்பது குறித்து தெலுங்கு தேசம் அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
சதாம் உசேன் ஈராக்கின் அதிபராக இருந்தார், 1979 முதல் 2003 வரை அந்த நாட்டை ஆட்சி செய்தார். அவரது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது என தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. சில மாநிலங்களும் பிற மொழிகள் திணிக்கப்படுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
முதலில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதேவேளையில் இந்திய கற்றுக் கொள்வது தேவையானதாகும். டெல்லியை தொடர்பு கொள்ள பயனுள்ளதாக இருக்கும். வாழ்வாதாரத்திற்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளலாம். இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழியாகும்.
வாழ்வாதாரத்திற்காக எத்தனை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். தாய்மொழியை நாம் மறந்து விடக்கூடாது. மொழிகள் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும்தான். அதிக மொழிகளை கற்றுக்கொள்ளவது சிறந்தது. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இந்தி தேசிய மொழி கிடையாது. இந்தி, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன.
தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபயணம், ரோடு ஷோ நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இதேபோல், அவரது மகன் நாரா லோகேஷ் வரும் ஜனவரி மாதம் முதல் ஆந்திரா முழுவதும் 400 நாட்கள் நடை பயணம் செல்ல பயணம் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலில் சந்திரபாபு நாயுடு திறந்தவேனில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் அநியாயங்கள் பெருகிவிட்டன. மளிகை பொருட்கள், காய்கறிகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. ரோடுகளை கூட சீரமைக்க முடியாத இவரால் எப்படி 3 தலைநகரங்களை அமைக்க முடியும்.
இவரது ஆட்சியில் ஏழைகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என்னை அவமதிக்கவோ அல்லது அவமதிக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஆனால் என்னையும் எனது மனைவி புவனேஸ்வரியும் ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்து பேசினார்.
எனக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரே வயது. ஜெகன்மோகன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவமதித்துவிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்தால் மட்டுமே சட்டசபைக்குள் வருவேன்.இல்லை என்றால் இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும். நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலேயே ஆந்திராவை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்.
தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்த பிறகு ஜெகன்மோகன் செய்த பல்வேறு குற்றங்களுக்காக சிறை செல்வது நிச்சயம். எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.
- தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும்.
- சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை தங்கள் வலையில் வீழ்த்தி உள்ளனர்.
மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மீதும் இந்த அரசு ஜெட் வரி விதித்ததால் மாதத்திற்கு அரசுக்கு ரூ.750 கோடி வருவாயாக கிடைக்கிறது. ஆனால் இறால் மீன்களின் விலையை கிலோவுக்கு ரூ.240-ல் இருந்து 210 ரூபாயாக இந்த அரசு குறைத்து விட்டது.
இதனால் விவசாயிகள் எப்படி பிழைப்பார்கள் என எண்ணிப் பார்க்கவில்லை. கூட்டத்திற்கு ஆதோனி, எமிகானூர், கடப்பா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து அதிக அளவு விவசாயிகள் கலந்து கொண்டதால் அந்த மாவட்டத் தலைவர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து ஜெகன்மோகன் நீக்கி விட்டார்.
வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிக்கும். குப்பம் தொகுதி மட்டுமல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியான புலி வேந்தலா உட்பட 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலம் சீரழிவை சந்திக்க நேரிடும் என்றார்.
சந்திரபாபு நாயுடு பேச்சுக்கு அமைச்சர் ரோஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக குண்டூரில் நடந்த ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:-
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.
எதிர்க்கட்சியாக உள்ளதால் எங்கள் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
- தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டது.
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமராவதி:
முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்
ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியினர் என கூறப்படும் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன், காயமடைந்தோரை மருத்துவமனையில் நேரில் சென்று சந்திரபாபு நாயுடு ஆறுதல் தெரிவித்தார்.
- தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி:
அமைச்சர் ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது,:-
தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து கோர்ட்டு தானாக முன்வந்து சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மனித உரிமை ஆணையமும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
- கட்சி நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார்.
- கடந்த மாதம் 29ம் தேதி கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்
குண்டூர்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்து மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதேபோல் கடந்த மாதம் 29ம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
அமராவதி:
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி 1-ந்தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பயனாளர்களுக்கு சங்கராந்தி பண்டிகை தொகுப்பை வழங்கினார். சந்திரபாபு நாயுடு கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறிய பின் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற இரண்டு பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே எஸ் ஜவஹர் ரெட்டி பிறப்பித்த உத்தரவில், ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி பி சேஷசயனா ரெட்டி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விசாரணை கமிஷன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
- சந்திரபாபு நாயுடுவை நடிகர் பவன் கல்யாண் சந்தித்துப் பேசினார்.
- இது அங்கு கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஐதராபாத்:
ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அங்கு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு பவன் கல்யாண் வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு தலைவர்களும் முறைப்படி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆந்திராவில் தற்போதைய சூழ்நிலை நெருக்கடி நிலையை விட மோசமானதாக உள்ளது. இங்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எல்லா எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். அத்தகைய சூழ்நிலையில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய அரசாணை, நெல் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தராதது, எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம் என தெரிவித்தனர்.
தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனா கட்சியும் கூட்டணி சேருவதற்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளிக்கையில், ஜனநாயகமும், அரசியல் கட்சிகளும் இயல்பாக செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறபோது, கூட்டணி பற்றி விவாதிக்கப்படும் என்றார்.