என் மலர்
நீங்கள் தேடியது "chandramugi2"
- இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
- சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.
சந்திரமுகி 2 படக்குழு
இதையடுத்து மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு 'சுறா' படத்தின் கச்சேரி சீனை நடித்து காண்பித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும்? என குறிப்பிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
He has entertained &made so many of us happy with his extraordinary presence in movies. He recreates the famous scene😂😂😂guess which famous movie scene was in? #laughteristhebestmedicine @offl_Lawrence #Vadivelu @LycaProductions #fun #filmmaking #TamilCinema #comedy ❤️❤️😂😂 pic.twitter.com/agCgELukvK
— Radikaa Sarathkumar (@realradikaa) July 20, 2022
- இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
- சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மைசூரில் தொடங்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த நிலையில், மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள்ளது. விரைவில் படபிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.
Kickstarted the Shoot 🎥 of #Chandramukhi2 🗝️✨ with a Pooja 🏵️ yesterday at 📍 Mysore
— Lyca Productions (@LycaProductions) July 16, 2022
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu 😎
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/zFG6ynynnG
- இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.
- சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கவுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார்.
சந்திரமுகி 2
அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். மேலும், லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
ரஜினி - ராகவா லாரன்ஸ்
இந்நிலையில், 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ராகவா லாரன்ஸ், நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.