என் மலர்
நீங்கள் தேடியது "chandrasekar"
- தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர் சந்திரசேகர்.
- உடல்நலக்குறைவு காரணமாக சந்திரசேகர் காலமானார்.
பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோரிடம் கிடாரிஸ்டாக பணியாற்றிய சந்திரசேகர், பிரபல டிரம்மர் இசைக்கலைஞர் புருஷோத்தமனின் அண்ணன் ஆவார். இவர்கள் இருவரும் இளையராவின் இசையில் பல படங்களில் இசைக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர். மூன்று முடிச்சு படத்தில் இடம் பெற்ற "வசந்தகால நதிகளிலே" பாடலில் மவுத் ஆர்கன் வாசித்தும், பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற "இளையநிலா பொழிகிறதே" பாடலில் கிடார் இசை வாசித்தும் ரசிகர்களிடையே சந்திரசேகர் புகழ் பெற்றார்.
1995-ஆம் ஆண்டு முதல் பல விளம்பர படங்களுக்கு பணியாற்றிய சந்திரசேகர், தமிழ் மட்டுமல்ல கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இசைகலைஞர் சந்திரசேகர் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இசைப் பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.