என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chappal"
- சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.
- நீரிழிவு நோயாளிகள் சிறப்பு காலணிகளை வாங்குவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுவது உண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாகப் பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதில் இருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன.
சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
நீரழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்தப் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.
- மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்.
கோடை வெயில் முடிந்து, பருவ மழை ஆரம்பித்திருக்கிறது. வெயில் காலத்தைப் போலவே, மழைக்காலத்திலும் சரும பராமரிப்பு, சரியான உடைகளை தேர்ந்தெடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவது முக்கியம். குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற காலணிகளை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும். காலணிகள் தேர்ந்தெடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
மழைக்காலத்தில் காலணிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். ஈரமான காலணிகளை அப்படியே அணியக் கூடாது. வெளியில் போய் வந்த பிறகு காலணிகளுக்குள் இருக்கும் நீரை வடிய வைத்து, உலர வைக்க வேண்டும். வாய்ப்பில்லாதவர்கள் காலணிகளை உலர வைக்க ஹேர் டிரையரை உபயோகிக்கலாம்.
ஈரப்பதத்தை உலர வைக்கத் தவறினால் பாதத்திலும், விரல்களின் இடுக்குகளிலும் பூஞ்சைத் தொற்றுகள், சேற்றுப்புண் பாதிப்புகள் வரக்கூடும்.
ஈரமான காலணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க சிலிக்கா ஜெல், கற்பூரம், நாப்தலின் உருண்டைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். இவை ஈரப்பதத்தை உறிஞ்சுவது மட்டுமில்லாமல், காலணிகளில் இருந்து துர்நாற்றத்தை நீக்கவும் வழி செய்யும்.
மழைக்காலத்தில், பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர், மழைநீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க தண்ணீர் புகாத, வாட்டர் புரூப் வகை காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதன்மூலம் நோய்த்தொற்று, கால்களில் வெடிப்பு போன்றவை வராமல் தடுக்கலாம்.
மழைக்காலத்தில் ஹீல்ஸ் வகை காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இவை எதிர்பாராமல் மழை நீரில் மாட்டிக் கொண்டால், நடக்கும்போது சிரமத்தை ஏற்படுத்தும்.
ஷூ உபயோகிப்பவர்கள், மழை நீர் புகாத ஷூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இல்லையெனில் ஷூவுக்குள் தண்ணீர் புகாத வண்ணம் பிளாஸ்டிக் கவர்களை வாங்கி அணிந்து கொள்ளலாம். ரப்பர் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட 'பிளிப் பிளாப்' வகை காலணிகள், மழைக்காலத்தில் அணிவதற்கு ஏற்றவை. இவை தண்ணீரை உறிஞ்சாமல் கால்களை உலர்வாக வைக்கும்.
ரப்பர்-சோல்ட் செருப்புகள், மழைக்கால சாலைகளில் நடக்கும்போது நல்ல பிடிமானத்தைக் கொடுக்கும். பாசி, சகதி போன்றவை வழுக்கி விடாமல் தடுக்கும்.
பட்டையுடன் கூடிய காலணிகள் மழைக்காலத்தில் அணிவதற்கு பொருத்தமானவை. ஈரம்படும்போது கால்களின் பிடியில் இருந்து வழுக்காமல் இருப்பதற்கு இவை உதவும்.
- காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
- இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில், பாதங்களில் உள்ள சருமம் வியர்வை, வறட்சி காரணமாக பாதிப்பு அடையும். இந்த சமயத்தில் பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, அவை மேலும் பாதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கோடையில் காலணிகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதற்கான சில யோசனைகள் இதோ:
இறுக்கமாக காலணிகள் அணியும் போது கால்களில் வீக்கம் ஏற்படலாம். காலின் பெருவிரலுக்கு இடையில் காற்றோட்டம் கிடைக்கும் வகையில், காலணிகளைப் பொருத்தமாகத் தேர்வு செய்ய வேண்டும். கோடையில், அணியும் காலணிகள் வழக்கமாக அணிவதை விட, அளவில் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.
அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, தட்டையான காலணிகளைத் தவிர்த்து, மெத்தென்று இருக்கும் வகையிலான மென்மையான காலணியையே தேர்வு செய்ய வேண்டும்.
தோல் சுவாசிக்க அனுமதிக்கும் வகையிலும், இயற்கை வெப்ப பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையிலும், காற்றோட்டமான காலணிகளைத் தேர்வு செய்வதும் கட்டாயம். தூய்மையான மெல்லிய தோலால் செய்யப்பட்ட காலணிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நாம் எந்த வகையான காலணிகளை அணிந்தாலும், அன்றைய நாள் முடிவில், கால்களுக்குச் சிறிது நேரம் மசாஜ் தேவை. பருவ நிலைக்கேற்ப குளிர்ந்த நீரிலோ அல்லது வெது வெதுப்பான நீரிலோ கால்களை சிறிது நேரம் வைத்திருந்த பின், லேசாக மசாஜ் செய்யலாம்.
சில வகை காலணிகள்:
கிளாடியேட்டர்கள்:
இது பெண்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய கோடைக்கேற்ற காலணி. அந்தக் காலத்தில், போரின் போது கிரேக்க மற்றும் ரோமானியர்கள் அணிந்திருந்த காலணி போன்றதாகும். இந்தக் காலணி, கீழ்ப் பகுதி தட்டையாகவும், உள்ளங்கால் முதல் மேல் பகுதி வரை அகலமான குறுக்குப் பட்டைகளுடனும் இருக்கும். இது அணிவதற்கு மிகவும் வசதியானது. வெளியூர் பயணத்தில் நீண்ட தூரம் நடக்கவும் ஏற்றது.
பிளிப்-பிளாப்ஸ்:
இவை முன்பக்கத்திலிருந்து தொடங்கி பக்கவாட்டில் முடிவடையும் வரை, ஆங்கில எழுத்து 'ஒய்' வடிவில் பட்டைகளைக் கொண்டிருக்கும். இறுக்கமாக இல்லாததால், பெண்களின் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், பாதங்களை உறுத்தாமலும் இருக்கும்.
ஸ்டைஸ்லைடர்கள்:
கடந்த சில ஆண்டுகளாக பெண்களிடம் பிரபலமாக இருக்கும் காலணி இது. இவை, பின்பக்கம் உயரம் குறைவாகவும், கால்களை மறைக்காமல் திறந்தபடி இருக்கும் வகையிலான காலணிகள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்