என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chasing"

    • குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது
    • வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.

    பைக்கில் மற்றொரு வாகனத்தை சேஸ் செய்து அதில் தாவி ஏறுவது எல்லாம் ஆக்ஷன் சினிமாவில் கிளீசேவாக இடம்பெறும் காட்சிதான்.

    ஆனால் இதுவே நிஜத்தில் உத்தர பிரதேச சாலையில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகர சாலையில், குதிரையில் கோட்டு சூட்டுடன் மணமகன் அமர்ந்திருக்க திருமண ஊர்வலம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

    அப்போது அவ்வழியாக குட்டி யானையை [மினி டிரக்கை] ஓட்டி வந்தவர் ஊர்வலம் அருகே சென்றபோது குதிரையில் அமர்ந்திருந்த மணமகனின் கழுத்தில் இருந்த பண மாலையை கிழித்துக்கொண்டு சென்றுள்ளார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் உடனே குதிரையில் இருந்து இறங்கி வழிப்போக்கர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு அந்த குட்டி யானையை துரத்தியுள்ளார்.

    ஒரு கட்டத்தில் பைக்கில் இருந்து குட்டி யானை மீது குதித்து பக்கவாட்டு கதவு வழியாக அதிரடியாக உள்ளே நுழைந்து அதை நிறுத்தச் செய்துள்ளார்.

    பின்னர் பண மாலையை பறித்த அந்த டிரைவரை கீழ் இறங்கிச் செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதற்குள் மாப்பிள்ளையின் நண்பர்களும் அங்கு வந்து சேரவே டிரைவருக்கு கடுமையான கவனிப்பு கிடைத்துள்ளது.

    நான் வேண்டும் என்றே செய்யவில்லை என்று அந்த ஓட்டுநர் மாப்பிள்ளையிடம் கெஞ்சுகிறார். இந்த ஆக்ஷன் சேசிங் காட்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இதுதொடர்பாக வழக்குப் பதவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.
    • மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை ஈ.சி.ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 26.01 2025 அன்று செல்வி சின்னி திலங்க் என்ற பெண் கானத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி 25.012025 அன்று நள்ளிரவு சுமார் 02.00 AM அளவில் தான் (TN.13S5466) என்ற காரில் முட்டுகாடு பாலம் அருகே வந்த போது இரண்டு கார்களில் (TN-75-E-6004, TN-09-BR-9988) வந்த 7-8 நபர்கள் திடீரென வழிமறித்துள்ளனர்.

    அங்கு நிற்காமல் தனது வீட்டிற்கு சென்ற செல்வி சின்னி திலங்க என்பவரை இரண்டு கார்களில் வந்த நபர்கள் துரத்தி சென்று கானத்தூரில் உள்ள அவரது வீட்டருகே நிறுத்தி பிரச்சனை செய்து அவர்களது காரை செல்வி. சின்னி திலங்க் என்பவர் கார் இடித்து விட்டு நிற்காமல் சென்றதாக கூறி உள்ளார்கள்.

    மேலும் மேற்படிகாரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதற்காக செல்வி. சின்னி திலங்க என்பவர் வந்த காரை துரத்தியதாகவும் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக வந்ததாக கூறியதை செல்வி. சின்னி திலங்க தரப்பு மறுத்துள்ளது.

    மேற்படி புகாரின் பேரில் கானத்தூர் காவல்நிலைய மனு ரசீது எண் 22/2025 நாள் 26.012025 வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து கானத்தூர் காவல் நிலைய குற்ற எண். 16/2025 u/s 126(2) 296(b), 324(2), 351(2) BNS r/w 4 of TNPHW Act பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேற்படி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் குற்றவாளிகள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்யவும் அதன் தொடர்சியான ஈசிஆர் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து துரித புலன்விசாரணை செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    கே.வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடித்து வரும் `சேஸிங்' என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் வரலட்சுமி டூப் ஏதுமில்லாமல் சண்டைபோடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படம் உருவாகிறது. 

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


    வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தஷி இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

    இது தவிர ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்’, ‘ராஜபார்வை’, ‘கன்னித்தீவு’, ‘கன்னிராசி’, ‘காட்டேரி’, ‘தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்’, ‘ரணம்’ உள்ளிட்ட படங்களும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது.

    தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, அடுத்ததாக ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடிக்கிறார். #Varalakshmi
    நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்கள், டிவி நிகழ்ச்சி என பிசியாகவே உள்ளார். தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இவை தவிர பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்‌ஷா, ஆஷ்னா சவேரியுடன் கன்னித்தீவு, விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கி‌ஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகியாகவும் நடித்து வருகிறார்.



    இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழ்ப் புத்தாண்டையொட்டு வெளியிடப்பட்டது. ஆக்‌‌ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
    ×